சகத்குரு ராமபத்தரர்சசார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சகத்குரு ராமபத்தரர்சசார்யா இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஜௌன்பூர் மாவட்டத்தில் சித்திரகூடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஜனவரி 14ம் நாள் 1950 இல் சர்யூபறீன் பிராமண குடும்பத்தில் பிறந்தவர். தாயாரின் பெயர் சச்சிதேவி என்பதாகும். தந்தையாரின் பெயர் பண்டிதர் சூரியபாலி மிஸ்த்ரா என்பதாகும். இவரின் பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் 'கிரிதர் மிஷரா' என்பதாகும்.

இவர் பிறந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக தனது கண்களின் பார்வையை இழந்தார். தொற்றுநோய்காரணமாக கண்பார்வையை இழந்த இவருக்கு பல்வேறு மருத்துவநிலையங்களில் வைத்தியம் செய்யப்பட்டபோதும் அவரால் கண்பார்வையைப் பெறமுடியவில்லை. கண்பார்வை இழந்த அவர் கேள்விஞானத்தால் மட்டுமே தனது அறிவை வளர்த்துக்கெர்ணடார். ஃபிறெயில் முறையையோ அல்லது வேறு எந்தமுறையையோ கற்றுக்கொண்டவர் அல்லர். இளமையிலேயே கிருஷணர்மீதான பற்றினை வளர்க்கும் பணியிலே தேவநாகரியில் இருந்து கிருஷணதோத்திரங்களையும் அவற்றின் விளக்கங்களையம் நன்கு உபதேசித்துவந்தார். பகவத் புராணம், சமஸ்கிருத இலக்கணம் ஆகியவற்றை தனது கேள்விஞானத்தாலேயே அறிந்து பெற்றுக்கொண்டார்.

1953இல் குழந்தைகள் குரங்காட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது குரங்குகள் தாக்கத்தொடங்க எல்லாக்கழந்தைகளும் ஓடித்தப்பினர். ஆனால் துர் அதிஷ்டவசமாக கிரிதர் கிணறொன்றில் தவறிவிழுந்து விட்டார். வெளியேறமுடியாது அதற்குள் இருந்துள்ளார். கிணற்றிலிருந்து சத்தம் வருவரை அவதானித்த பதின்மவயது யுவதியொருவர் அவரைப் பாதுகாத்து வெளியே எடுத்துவிடும் வரை அவர் கிணற்றுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் கிணற்றினுள் இருந்தபடியே கிருஷ;ணரைப்பற்றி அவரது தாய்வழிப்பாட்டனாரால் சொல்லித்தரப்பட்ட பாடலை இசைத்தமையாலேயே அவர் தப்பிப்பிழைத்துக்கொண்டார். அபயக்குரல் கேட்ட இடத்திற்குக் கிருஷ்ணன் வந்து உதவுவார் என்பதில் நம்பிக்கொண்டார். அவரது பாட்டனார் இவருக்கு காவியங்கள், சமய நூல்களை வாசித்தும் எடுத்துக்கூறியும் இவரது கல்வியறிவைப் பெருக்கிக்கொள்ள வழிவகுத்தார். மிகச் சிறந்த கல்விமானாகாப் போற்றப்படும் இவர் 'ஜகத்குரு ராமபத்ராச்சார்யா' என்னும் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட நால்வருள் ஒருவராகதத் திகழ்கின்றார். 'மனிதநேயமே எனது ஆலயம். நான் அதனை வணங்கும் அடியான். வலுவற்றவர்களே எனது கடவுளர். நான் அவர்களின் பேரார்வம்கொண்ட அடியார்' எனக்குறிப்பிடுகின்றார் என்றால் அவரது நோக்கம், கொள்கை 'மனிதசேவையே மகேசன் சேவை' என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. இவரது சீடர்களுள் பிராஜ் ராஜேந்திர மிஸ்ரா குறிப்பிடத்தக்கவராவார். இராமர் வனவாசம் செய்த சித்திரகூடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதோடு தனது கதைகளின் நிலைக்களனாக சித்திரகூடத்தையே கொண்டுள்ளார். கதைகள், நாடகங்கள், பாடல்கள், கவிதைகள் என்பனவற்றைப் படைத்துள்ளதோடு ஒரு சிறந்த பாடகராகவும் விளங்குகின்றார். இவரால் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்களத்தில் நான்குவகையான வலுவளர் அல்லது வலுக்குறைந்தவர்கள் கல்வி கற்று முன்னுக்குவரும் வாய்ப்பினை ஏற்பாடு செய்திருக்கின்றார். புட்டப் பின்படிப்பினையும அவர்கள் தொடரக்கூடிய வாய்ப்புக்கள் நல்கப்பட்டுள்ளன. கண்தெரியாதர்வளுக்கான எழுத்து முறைகளையோ அல்லது வேறு வகையான கற்றல் முறைகளையும் அவர்கள் மேற்கொள்ளத்தக்க வகையில் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆவர் 90க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளதோடு, 50மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அத்தோடு நான்கு காவியங்களையும் கவிதைவடிவத்தில் வடித்துத் தந்துள்ளார். துளசிதாசர் பற்;றிய வலுகான எழுத்தாளராக அவர் காணப்படுகின்றார். அவரது கதாகாலாட்சேபம் இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. எழுதவோ அன்றி வாசிக்கவோ முடியாத ஜகத்குரு தனது பெருவிரல் அடையாளத்தையே கையொப்பமாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

1988இல் ஜகத்குரு ரமணந்தாச்சார்ய அவரது பெயரைச் சுவாமி ராமபக்தாராச்சர்யா என மாற்றிச் சூட்டி அழைக்கலானார். இவர் ஒரு பன்மொழிப்புலவர் ஆவார். ஏறக்குறைய 22 மொழிகளைத் தெரிந்த மொழியியலாளராகக் காணப்படுவதோடு சமஸ்கிருதமொழியில் பாண்டித்தியம் பெற்றவரும் ஆவார். பன்மொழிப்புலவர் மட்டுமன்றி, நாடக ஆசிரியராகவும் இயக்குநராகவும் விளங்கிய இவர் சிறந்த கல்விமானும் கவிஞரும் ஆவார். சுமய தத்துவாசிரியராகவும் பர்ணமித்துள்ளார். சகத்குரு ராமபத்ராச்சர்யா பல்கலைக்கழகம் என்னும் ஊனமுற்றோர் பல்கலைக் கழகத்தை ஆரம்பித்தவர் ஆவார். குறிப்பாக துளசி பீடம் எனப்படும் பார்வையற்றோருக்கான உயர்நிலைக் கல்வி நிறுவனத்தினை நிறுவி வழிநடத்தியவரும் இவரே. அத்தோடு மட்டுமன்றி ஜகத்குரு ராமபத்ராச்சார்யா, விக்லங் சேவா சங்கம், காஞ்ச் மந்திர், சகத்குரு ராமபத்ராச்சார்யா விக்கலங் ன் சன்ஸ்தன் ஆகியவற்றின் நிறுவனரும் இவரே. வைணவத்தில் 'ராமானந்தி' மதப்பிரிவினையும் தோற்றுவித்து அதனை வழிநடத்தி வந்தவர். இவரது ஆசான்களாக ஸ்வர்தாஸ், ராம்பிராத் திரிபாதி, ராம்சரண்தாஸ் ஆகியோரைக் குறிப்பிடலாம். அவர்களுள் ஸ்வர்தாஸ் மந்திரங்கள் உபநிடதங்களையும், ராம்பிரசாத் சமஸ்கிருத மொழியையம், ராம்சரண்தாஸ் சம்பிரதாயங்களையும் கற்றுத் தந்தனர். 'வைஸ்ணவத்துவ வேதாந்தம்' இவரது அடிப்படை மதக்கொள்கையாகக் காணப்பட்டது.