குட் கோபுர நூதனசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட் கோபுர நூதனசாலை
Hoods Tower Museum 3.jpg
குட் கோபுர நூதனசாலை பெயர்ப்பலகை
அமைவிடம்திருக்கோணமலை, இலங்கை
வகைகடற்படை நூதனசாலை

குட் கோபுர நூதனசாலை (Hoods Tower Museum) என்பது திருக்கோணமலையில் அமைந்துள்ள இலங்கைக் கடற்படையினரின் நூதனசாலை ஆகும். திருகோணமலைத் தீபகற்பத்தின் உயரமான ஒஸ்டன்பேர்க்கில் அமைந்துள்ள இது, திருக்கோணமலை உள் துறைமுக வாயிலை நோக்கியவாறு அமைந்துள்ளது. இந்த நூதனசாலையின் பெயர் கிழக்கிந்தியக் கட்டளையதிகாரி சேர் சமுவேல் குட் என்பவரின் பெயரில் அமைந்திருந்த அவதானிப்புக் கோபுரத்திலிருந்து பெறப்பட்டது.[1]

ஒஸ்டன்பேர்க் கோட்டை[தொகு]

திருக்கோணமலை உள் துறைமுக வாயிலில் ஒரு சிறிய கோட்டை ஒஸ்டன்பேர்க் கோட்டை (Fort Ostenburg) இடச்சுக்காரரினால் கட்டப்பட்டிருந்தது. இது 1795 இல் பிரித்தானியரிடம் சரணடைந்தது. இது இலங்கையில் இருந்த கோட்டைகளில் "மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கிகளின் கோட்டை" என அழைக்கப்பட்டது. இங்கு கடல் மட்டத்தில் பலமான பீரங்கித் தொகுதிகளும் பல பீரங்கிகள் குன்றின் மேலும் காணப்பட்டன. ஆயினும், தற்போது கோட்டையின் சிறிதளவு எச்சங்களே காணப்படுகின்றன. பிரித்தானியா 1920 முதல் மேற்கொண்ட கரையோர பீரங்கித் தொகுதிகளின் கட்டுமானத்திற்கான கோட்டை அழிக்கப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Hoods Tower Naval Museum at Trincomalee". 2 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Trinco's spoils of war". 2 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்_கோபுர_நூதனசாலை&oldid=2222127" இருந்து மீள்விக்கப்பட்டது