இரத்தினபுரி இடச்சுக் கோட்டை
இரத்தினபுரி இடச்சுக் கோட்டை | |
---|---|
இரத்தினபுரி, இலங்கை | |
![]() | |
ஆள்கூறுகள் | 6°40′46″N 80°24′09″E / 6.679548°N 80.402549°E |
வகை | Defence கோட்டை |
இடத் தகவல் | |
இட வரலாறு | |
கட்டியவர் | ஒல்லாந்தர் |
இரத்தினபுரி இடச்சுக் கோட்டை (Ratnapura Dutch fort) என்பது ஒல்லாந்தரால் இரத்தினபுரியில் அமைக்கப்பட்ட கோட்டை ஆகும். முதலில் இக்கோட்டையைப் போர்த்துக்கேயரே அமைத்தனர். 1658 ஆம் ஆண்டில் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களிலிருந்து போர்த்துக்கேயரை விரட்டிய பின்னர் அப்பிரதேசங்களை தமது ஆட்சிக்குக் கொண்டு வந்த ஒல்லாந்தர் இக்கோட்டையை தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தினர். எனினும் மத்திய நகர்ப்பகுதியில் மலைப்பாங்கான இடமொன்றில் மேலும் ஓர் புதிய கோட்டையை அமைத்தனர். ஒல்லாந்தர் இதனை பயன்படுத்திய காலத்தில் இக்கோட்டை கண்டியின் நாயக்க வம்ச மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனால் கைப்பற்றப்பட்டு இடிக்கப்பட்ட்டது.
இக்கோட்டையானது களுத்துறைக் கோட்டைக்கு ஒப்பானதாகும். இங்கு இரண்டு பாதுகாப்பு அரண்கள் காணப்படுகின்றன. இங்கு ஒல்லாந்த தேசாதிபதியின் அலுவலகம், வாசஸ்தலம், 40 பேருக்கான தேவாலயம் மற்றும் வீடுகள், நீதிமன்ற கட்டடம், வைத்தியசாலை போன்றவை இருக்கும் அளவிற்கு மிகவும் பெரியதாக இக்கோட்டை அமைந்திருந்தது. 1817 ஆம் ஆண்டில் இக்கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.[1]
2002 ஆம் ஆண்டிலும் 2005 ஆம் ஆண்டிலும் இக்கோட்டையானது தொல்பொருள் நினைவுச் சின்னமாகத் திறந்து வைக்கப்பட்டது. எனினும் அரசாங்கத்தால் இக்கோட்டையுன் சில பகுதிகள் இடிக்கப்பட்டு பல்வேறு கட்டடங்களும் இப்பிரதேசத்தில் கட்டப்பட்டது. தற்போது இக்கோட்டை தேசிய இரத்தினக்கல் மற்றும் நகைகளுக்கான அமைப்பின் அலுவலகமாக செயற்பட்டு வருகின்றது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pre-Histry and History". Ministry of Provincial Roads Development, Rural Infrastucture Facilities and Tourism. 3 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dutch Fort at Ratnapura". 23 November 2014 அன்று பார்க்கப்பட்டது.