கற்பிட்டிக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்பிட்டிக் கோட்டை
பகுதி: புத்தளம்
கற்பிட்டி, இலங்கை
கற்பிட்டிக்கோட்டையின் மேற்குப்பகுதி
கற்பிட்டிக் கோட்டை is located in இலங்கை
கற்பிட்டிக் கோட்டை
கற்பிட்டிக் கோட்டை
ஆள்கூறுகள் 8°14′8″N 79°45′58″E / 8.23556°N 79.76611°E / 8.23556; 79.76611
வகை Defence கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை அரசாங்கம்
மக்கள்
அநுமதி
இல்லை
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 1667-1676
கட்டியவர் இடச்சுக்காரர்
கட்டிடப்
பொருள்
படிவுப் பாறை பவளப்பாறை
உயரம் 4 m (13 அடி)

கற்பிட்டிக் கோட்டை (Kalpitiya fort) என்பது இலங்கையில் கட்டப்பட்ட ஓர் இடச்சுக் கோட்டை ஆகும். இது 1667 ஆம் ஆண்டிற்கும் 1676 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டதாகும். புத்தளம் கடனீரேரிக்கு அருகாமையில் உள்ள குடாவாக விளங்கியமையால் கறிபிட்டி முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்பட்டது. இலங்கையில் கறுவா அதிகம் பயிரிடப்படும் பிரதேசமாக புத்தளம் விளங்கியது. இக்கறுவாவினை புத்தளத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்துச் செல்வதற்காக புத்தளம் வழியாக நீர்கொழும்பிற்குக் கால்வாய் ஒன்று ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்டது. இக்கோட்டையானது படிவப்பாறைகளையும் முருகைக்கற்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. இக்கோட்டையின் அமைப்பு சதுர வடிவத்தை ஒத்ததாகும்.[1] அத்துடன் சுவர்கள் 4 மீற்றர் உயரத்தில் காணப்படுகின்றன. இக்கோட்டை 1795 ஆம் ஆண்டில் பிரித்தானியரிடம் சரணடைந்தது. பிரித்தானியரது இராணுவத்தின் தேவைகளுக்காக இக்கோட்டை பயன்படுத்தப்பட்டு 1859 ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fernando, Kishanie S. (9 June 2013). "Colonial Forts – relics of old time warfare". Ceylon Today இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923224304/http://www.ceylontoday.lk/64-34505-news-detail-colonial-forts-relics-of-old-time-warfare.html. பார்த்த நாள்: 11 November 2014. 
  2. "Conservation of the Dutch Fort and other buildings in Kalpitiya". Cultural Heritage Connections. 25 July 2013. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பிட்டிக்_கோட்டை&oldid=3238705" இலிருந்து மீள்விக்கப்பட்டது