களுத்துறைக் கோட்டை
Appearance
களுத்துறைக் கோட்டை | |
---|---|
களுத்துறை, இலங்கை | |
இடச்சு செதுக்கு வேலை, 1672 | |
ஆள்கூறுகள் | 6°35′13″N 79°57′37″E / 6.587070°N 79.960175°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | அழிக்கப்பட்டது |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1622 |
கட்டியவர் | போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் |
களுத்துறைக் கோட்டை (Kalutara fort) 1622 இல் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது.[1] இது களுத்துறையில் அமைந்திருந்தது.
1574 இல், போர்த்துக்கேயப் படையினர் கொழும்பின் தென் பகுதியில் இருந்த சமய வழிபாட்டிடங்களை அழித்தனர். 1594 இல் போர்த்துக்கேயப் படையினர் களுத்துறை நகரைக் கைப்பற்றினர். 1622 இல், அவர்களால் கன்கதில விகாரை அழிக்கப்பட்ட இடத்தில் கோட்டை கட்டப்பட்டது.[2] இது சீதாவக்கை அரசன் முதலாம் ராஜசிங்கனால் கைப்பற்றப்பட்டது. பின்பு இடச்சுக்காரரினால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு, மீண்டும் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Kalutara : Diyambetalawa – Caletvre – Calleture". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2014.
- ↑ "Kalutara District". Ceylon Today. 11 November 2012. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)