பலனக் கோட்டை
Appearance
பலனக் கோட்டை | |
---|---|
பகுதி: கண்டி மாவட்டம் | |
கன்னொருவை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 7°16′13″N 80°28′33″E / 7.270409°N 80.475876°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | எச்சம் |
இட வரலாறு | |
கட்டியவர் | கண்டி இராச்சியம் |
சண்டைகள்/போர்கள் | கன்னொருவ போர் |
பலனக் கோட்டை [1](Balana fort) அலகலை மலைத்தொடருக்கு அருகில் கண்டி இராச்சியத்தினால் கட்டப்பட்டது. இக்கோட்டை தந்திரோபாய கல் அரணாகவும் கண்டி இராச்சியத்தின் புறக்காவலாகவும் செயற்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில், இம்மலையில் சுரங்கம் அமைத்து தேயிலை, கோப்பி ஆகியவற்றை இதனூடாக, கொழும்பு-கண்டி தொடருந்துப் பாதையில் கொண்டு செல்ல செயற்படுத்தினர்.[2]
போர்த்துக்கேயர் கண்டியை கைப்பற்ற முயன்றதால் கண்டியின் இரண்டாம் இராசசிங்கன் ஒல்லாந்தருடன் மறைமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டான். போர்த்துக்கேயர் கண்டி மீதான படையெடுப்புக்கள் சில பின்னடைவுகளின் பின் வெற்றி பெற்றது. இதனால் பலனக் கோட்டை போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ "தமிழ் மின் நூலகம்". தமிழ் மின் நூலகம். பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "Balana Fort". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
- ↑ "Episodes of colonised history". Sunday Observer. 3 பெப்ரவரி 2008. Archived from the original on 2008-02-07. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|date=
(help)