அரிப்புக் கோட்டை
அரிப்புக் கோட்டை | |
---|---|
மன்னார், இலங்கை | |
ஆள்கூறுகள் | 8°47′33″N 79°55′47″E / 8.792592°N 79.929653°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | சிதைவு எச்சம் |
இட வரலாறு | |
கட்டியவர் | போர்த்துக்கேயர் |
அரிப்புக் கோட்டை (Arippu Fort) அல்லது அல்லிராணிக்கோட்டை[1] இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் மன்னார்த் தீவுக்கு 10 மைல்கள் தெற்கேயுள்ள அரிப்பு என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். வரண்ட தரிசு நிலப்பகுதியில் அமைந்துள்ள இக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது. 1658ல் இதனைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இதைத் திருத்தி அமைத்தனர்.
அமைப்பு[தொகு]
அரிப்புக் கோட்டை ஏறத்தாழச் சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் கோட்டையின் வடக்குச் சுவரையும், கிழக்குச் சுவரையும் அண்டி வீரர்கள் தங்குவதற்கான அறையும், வேறு சிறிய அறைகளும் காணப்படுகின்றன. தெற்குப்புறச் சுவரில் கோட்டை வாசல் உள்ளது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "கடலரிப்பால் பாழாகும் வரலாற்றுப் புகழ் மிக்க அல்லிராணிக் கோட்டை" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304202700/http://www.tamilcnnlk.com/archives/250420.html. பார்த்த நாள்: 18 சூலை 2015.
உசாத்துணைகள்[தொகு]
- Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).