கட்டுவனைக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுவனைக் கோட்டை
பகுதி: மாத்தறை மாவட்டம்
கட்டுவானை, இலங்கை
கட்டுவனைக் கோட்டை is located in இலங்கை
கட்டுவனைக் கோட்டை
கட்டுவனைக் கோட்டை
ஆள்கூறுகள் 6°16′3″N 80°41′42″E / 6.26750°N 80.69500°E / 6.26750; 80.69500
வகை தடுப்புக் கோட்டை
இடத் தகவல்
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 1646
கட்டியவர் ஒல்லாந்தர்
உயரம் 5 m (16 ft)

கட்டுவனைக் கோட்டை (Katuwana fort) என்பது ஒல்லாந்தரினால்1646 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.[1][2]

பொதுவாக போர்த்துக்கேயர் போன்ற அந்நியர்களின் காலனித்துவத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒல்லாந்தர் கரையோரங்களிலேயே பல்வேறு கோட்டைகளைக் கட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எனினும் கண்டி இராச்சியத்தின் தாக்குதல்களிலிருந்து க்ரையோரத் தாழ்நிலப் பிரதேசங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாட்டின் உட்பிரதேசங்களிலும் கோட்டைகளைக் கட்டினர். அவ்வாறான கோட்டைகளில் கட்டுவனைக் கோட்டையும் ஒன்றாகும். கட்டுவனைக் கோட்டையானது மாத்தறையிலிருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர்கள் (25 mi) தொலைவில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிப்பிரதேசத்தில் கண்டியின் அடிப்பகுதியில் கட்டப்பட்டது.[3]

1761 ஆம் ஆண்டில் மாத்தறைக் கலவரம் இடம்பெற்ற காலப்பகுதியில் கண்டி மன்னன் கீர்த்தி சிறீ இராஜசிங்கனால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டதுடன் கோட்டையின் சில பகுதிகள் இடிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Katuwana". VOC Sri Lanka. 18 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Fernando, Kishanie S. (9 June 2013). "Colonial Forts – relics of old time warfare". Ceylon Today. Archived from the original on 23 செப்டம்பர் 2015. https://web.archive.org/web/20150923224304/http://www.ceylontoday.lk/64-34505-news-detail-colonial-forts-relics-of-old-time-warfare.html. பார்த்த நாள்: 18 November 2014. 
  3. 3.0 3.1 Kulatunge, Manuri (19 May 2013). "Forgotten Fort of Katuwana". The Nation. Archived from the original on 29 நவம்பர் 2014. https://web.archive.org/web/20141129030053/http://www.nation.lk/edition/fine/item/17855-forgotten-fort-of-katuwana.html. பார்த்த நாள்: 18 November 2014. 

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுவனைக்_கோட்டை&oldid=3237885" இருந்து மீள்விக்கப்பட்டது