அம்மன்னீல் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மன்னீல் கோட்டை
Fort Hammenheil
யாழ் தீபகற்பம், இலங்கை
ஊர்காவற்றுறைக் கோட்டையிலிருந்து பார்க்கும்போது
அம்மன்னீல் கோட்டை Fort Hammenheil is located in இலங்கை
அம்மன்னீல் கோட்டை Fort Hammenheil
அம்மன்னீல் கோட்டை
Fort Hammenheil
ஆள்கூறுகள் 9°25′27″N 79°30′19″E / 9.424228°N 79.505290°E / 9.424228; 79.505290
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை கடற்படை
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 1618
கட்டியவர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்
கட்டிடப்
பொருள்
கருங்கல், பாறை

கடற்கோட்டை என்று அழைக்கப்படும் அம்மன்னீல் கோட்டை (Hammanheil) காரைநகர்த் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒடுங்கிய கடற்பகுதியில் உள்ள சிறிய மணற்திட்டு ஒன்றில் அமைந்துள்ளது. இவ்வொடுங்கிய கடற்பகுதியே பாக்கு நீரிணைப் பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகரத்தையொட்டி அமைந்துள்ள நீரேரிப் பகுதிக்குள் வருவதற்கான முக்கிய வழியாகும். இந்த வழியைப் பாதுகாப்பதற்காகவே இக் கோட்டை அமைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

1620 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது ஆட்சியின்கீழ் கொண்டுவந்த பின்னர், பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வருவதற்கான கடல்வழியின் பாதுகாப்புக்காக இக் கோட்டையை அமைத்தனர். அவர்கள் இதற்கு அரச கோட்டை (Fortaleza Real) என்றும் Fortaleza do Rio (ஆற்றின் கோட்டை) என்றும் அழைத்தனர்.[1] அரச கோட்டை) 1658 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை முற்றுகை இட்டபோது இக் கோட்டையையும் முற்றுகை இட்டுக் கைப்பற்றிக் கொண்டனர். ஒல்லாந்தர் காலத்திலும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்கு இன்றியமையாததாக ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்பட்டு முற்றிலும் ஒல்லாந்தரைக் கொண்ட படையினர் இக்கோட்டையில் நிறுத்தப்பட்டனர். 1796 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பிரித்தானியரின் கைக்கு வந்தபோது, இக் கோட்டையும் அவர்களின் ஆளுகைக்குள் வந்தது. எனினும் இவர்கள் காலத்தில் இதன் பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவம் குறைந்து விட்டது. 1930களில் இது நோயாளர்களைத் தனிமைப்படுத்தும் நிலையமாகப் பயன்பட்டதாக நெல்சன் என்பவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்[2].

அமைப்பு[தொகு]

இக் கோட்டை எட்டுப் பக்கங்களைக் கொண்ட பல்கோண வடிவம் கொண்டது. இதன் தெற்குப் பக்கத்தில் உள்ள சுவரில் கோட்டைக்கான வாயில் அமைந்துள்ளது. வடகிழக்குப் பக்கச் சுவரில் முக்கோண வடிவிலான ஒரு நீட்சி காணப்படுகிறது. ஒல்லாந்தர் காலத்திலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலும் உள்ளே இரண்டு சிறிய கட்டிடங்கள் அமைந்திருந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ralph Henry Bassett. "Romantic Ceylon: Its History, Legend, and Story". பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Nelson, W. A., 2004. பக். 93.
  • Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மன்னீல்_கோட்டை&oldid=3909479" இலிருந்து மீள்விக்கப்பட்டது