திருகோணமலைக் கோட்டை
திருகோணமலை கோட்டை Fort Fredrick | |
---|---|
பகுதி: திருகோணமலை | |
திருகோணமலை, இலங்கை | |
Entrance of Fort Fredrick | |
வகை | பாதுகாப்பு கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | நன்று |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1623 |
பயன்பாட்டுக் காலம் |
1623 - இன்று வரை |
கட்டியவர் | போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் |
கட்டிடப் பொருள் |
கருங்கல், பாறை |
காவற்படைத் தகவல் | |
தங்கியிருப்போர் | இலங்கை அரச நிர்வாகம் |
திருகோணமலை கோட்டை (பிரட்ரிக் கோட்டை) திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ளது. இந்தக் கோட்டை போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் (பிரான்சியர் இதனை பிடித்து மீண்டும் ஒல்லாந்தரிடம் ஒப்படைத்தனர்), மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக் கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது. தற்போது இலங்கை இராணுவதின் (படையாட்களின்) பலமான முகாமாக விளங்குகின்றது. தற்போது இங்கு கட்டுப்பாடுகள் இன்றி சென்று வர முடியும்.[1][2][3]
திருக்கோணேச்சரத்துக்குப் போகும் பாதையும் கோட்டைக்குப் போகும் பாதையும் ஒன்றாகும்.
வரலாறு
[தொகு]1623 ல் இந்தக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. 1639 ல் பேர்த்துக்கேயர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதன் பின்பு மீள்கட்டுமானம் போன்ற பெருமளவான மாற்றங்களுக்குக் கோட்டை உள்ளானது. 1672 இல் பிரான்சியர் இந்தக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினர்.
ஜனவரி 8 , 1782 இல் பிரித்தானியர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதே ஆண்டு ஆகஸ்ட் 29 ல் பிர்ரான்சியர் (பிரெஞ்சுக்காரர்) இந்தக் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். 1783 ல் பிரான்சு இதை najla கையளிக்க பிரித்தானியர் ஒல்லாந்தரிடம் கையளித்தனர். இருந்தாலும், 1795 இல் பிரித்தானியர் மீள இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதுடன் 1948 ல் இலங்கை விடுதலை அடையும் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பலரும் இந்த பிரட்ரிக் கோட்டையில் கவனம் செலுத்தக் காரணமாக அமைந்தது திருகோணமலையின் இயற்கைத் துறைமுகமே.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Perniola, V. “The Catholic church in Sri Lanka. The Portuguese period”, Vol. II, p. 366.
- ↑ Perniola, V. “The Catholic church in Sri Lanka. The Portuguese period”, vol. II, p. 458.; Perniola, V. “The Catholic church in Sri Lanka. The Portuguese period”, vol. III, p. 51.: Later, another decree of the same bishop of Cochin dated 11 November 1622, tracing that one indicated in 1602, entrusted newly to the Jesuits the spiritual cure in the districts of Jaffna, Trincomalee and Batticaloa, giving to them possibility to build churches, to train the sacraments and to convert the souls. The Jesuits would follow the Portuguese soldiers to Trincomalee and Batticaloa when they occupied the two localities.
- ↑ Barner Jensen, U. “Danish East India. Trade coins and the coins of Tranquebar, 1620-1845”, pp. 11-12; Holden Furber “Imperi rivali nei mercati d’oriente, 1600-1800”, note n° 66, p. 326: "Senarat of Kandy sent to Trincomalee 60 Sinhala men in order to help the Danes in the construction of their fort. During their permanence in Trincomalee, the Danesh coined also some "Larins", on which were recorded the words ‘Don Erich Grubbe’, of these coins, today do not remain trace, if not in the diary of Ove Giedde."