மிகிந்தலை அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது | 1984 |
---|---|
அமைவிடம் | மிகிந்தலை, இலங்கை |
ஆள்கூற்று | 8°21′20″N 80°30′48″E / 8.3555°N 80.5133°E |
வகை | தொல்பொருள் |
வலைத்தளம் | http://www.archaeology.gov.lk |
மிகிந்தலை தொல்பொருள் நூதனசாலை அல்லது மிகிந்தலை தொல்பொருள் அருங்காட்சியகம் (Mihintale Archaeological Museum) என்பது இலங்கையின் மிகிந்தலையில் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும்.[1] இவ்வருங்காட்சியகம் 1984 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இவ்வருங்காட்சியகம் இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.[2] மிகிந்தலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெண்கலத்தினாலான சிறு உருவச்சிலைகள், புராதன காலத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், சுதை ஓவியங்களினதும் வர்ணந் தீட்டப்பட்ட ஓவியங்களினதும் எச்சங்கள் ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பொருட்களாகும். அத்துடன் 9 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஓலைச்சுவடி,[3] பௌத்த ஆலயம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நினைவு சின்னப் பேழை ஒன்றின் மாதிரி[4] ஆகியவையே இத்தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காணப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்பொருட்கள்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mihintale Museum (Site)". archaeology.gov.lk. Archived from the original on 27 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Modernised Mihintale museum opened". dailynews.lk. 18 December 2012. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
- ↑ "Mihintale Museum". srilankatravelogue.com. Archived from the original on 5 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Mihintale Museum". mysrilankaholidays.com. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.