காலி தேசிய நூதனசாலை
Jump to navigation
Jump to search
![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | மார்ச்சு 31, 1986 |
---|---|
அமைவிடம் | காலி, இலங்கை |
இயக்குநர் | திரு.மஞ்சுள கருணாதிலக |
வலைத்தளம் | www.museum.gov.lk |
காலி தேசிய அருங்காட்சியகம் அல்லது காலி தேசிய நூதனசாலை இலங்கையின் உள்ள காலிக் கோட்டையில் அமைந்துள்ளது.இது இலங்கையின் தென் மாகானத்தைச் சார்ந்த வரலாற்றுடன் தொடர்புபட்ட பல அரும் பொருட்களைக் கொண்டுள்ளது.1986 மார்ச் மாதம் 31 ஆந் திகதி இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.[1] இதனை இலங்கை அரசின் நூதனசாலைகள் திணைக்களம் நிர்வாகிக்கின்றது.
இந்த அருங்காட்சியகத்தில் தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது பெறப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கே புராதன மட்பாண்டத் துண்டுகள், களிமண் உருவங்கள், முகம்மூடிகள், ஓடுகளால் செய்யப்பட்ட பொருட்கள், உலோகப் பொருட்கள், பழமையான நகைகள்,அணிகலன்களுக்கான மணிகள், ஒல்லாந்தர் கால ஆயுத உபகரனங்கள் மற்றும் பௌத்தம் சார் பொருட்களும் காணப்படுகிறன.[2]