புதுருவாகல நூதனசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுருவாகல தொல்பொருள் அருங்காட்சியகம்
Archaeological Museum, Buduruwagala
Map
நிறுவப்பட்டது1988[1]
அமைவிடம்புதுருவகல, இலங்கை
வகைArchaeological
வலைத்தளம்http://www.archaeology.gov.lk

புதுருவாகல நூதனசாலை அல்லது புதுருவாகல அருங்காட்சியகம் (Buduruwagala Archaeological Museum) என்பது இலங்கையின் புதுருவகலவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். இது 1988 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இவ்வருங்காட்சியகம் இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. புதுருவாகல மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய இராசதானிகளை சேர்ந்த நினைவுச் சின்னங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன[2]

திறக்கும் நேரம்[தொகு]

செவ்வாய் தவிர்ந்த மற்றைய வாரநாட்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இவ்வருங்காட்சியகம் திறந்திருக்கும். பொதுசன விடுமுறைகளிலும் வங்கி விடுமுறைகளிலும் இவ்வருங்காட்சியகம் திறக்கப்படமாட்டாது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Buduruwagala Museum". srisalike.com. Archived from the original on 22 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Buduruwagala Museum (Regional)". archaeology.gov.lk. Archived from the original on 27 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுருவாகல_நூதனசாலை&oldid=3679446" இலிருந்து மீள்விக்கப்பட்டது