அனுராதபுர கிராமிய நூதனசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுராதபுர கிராமிய நூதனசாலை
நிறுவப்பட்டதுஆகத்து 22, 1971
அமைவிடம்அனுராதபுரம், இலங்கை
வகைதொல்பொருள் / கிராமிய
வலைத்தளம்http://www.archaeology.gov.lk

அனுராதபுர கிராமிய நூதனசாலை[1] அல்லது அனுராதபுர கிராமிய அருங்காட்சியகம் என்பது இலங்கையில் உள்ள கிராமிய நூதனசாலை ஒன்றாகும். அனுராதபுரத் தொல்பொருள் அருங்காட்சியகத்தின் அருகில் இது அமைந்துள்ளது. ஆகத்து 22, 1971 அன்ரு இந்நூதனசாலை ஸ்தாபிக்கப்பட்டது.[2]

கிராமிய சமூக மக்கள் பயன்படுத்திய பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்பொருட்கள் கிராமவாசிகளின் வாழ்க்கைமுறையை எடுத்தியம்புகின்றன. இங்கு பொதுவாக விவசாய உபகரணங்கள், சமயலறை உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், இசைக்கருவிகள் போன்றவையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[3]

திறக்கும் நேரம்[தொகு]

தினமும் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை இந்நூதனசாலை திறந்திருக்கும். ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பொதுசன விடுமுறைகளிலும் மூடப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிராமிய நூதனசாலை". பார்த்த நாள் 2 January 2016.
  2. "Anuradhapura Folk Museum". Department of National Museums. பார்த்த நாள் 7 July 2015.
  3. "Anuradhapura Folk Museum : Portraying the lifestyle of a peasantry". Sunday Observer (Sri Lanka). பார்த்த நாள் 7 July 2015.

இவற்றையும் பார்க்க[தொகு]