காரோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரோ
ஆ சீக் (আ·চিক)
நாடு(கள்)இந்தியா, வங்காளதேசம்
பிராந்தியம்மேகாலயா, அஸ்ஸாம், வங்காளதேசம்
இனம்காரோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1 மில்லியன்  (2001–2005)[1]
சின-திபெத்திய
  • காரோ
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
மேகாலயா (இந்தியா)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3grt
மொழிக் குறிப்புgaro1247[2]

காரோ மொழி (Garo) இந்திய மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி மேகாலயா மாநிலத்தின் காரோ மலைத்தொடர்களில் பரவலாக பேசப்படுகிறது. அஸ்ஸாம், திரிபுரா ஆகிய இந்திய மாநிலங்களிலும் வங்காளதேசத்திலும் பேசப்படுகிறது.

மொழியின் விவரங்கள்

காரோ மொழி சீன-திபெத்திய மொழிக்குடும்பத்தின் கிளை மொழிக்குடும்பமான போடோ-காரோவைச் சேர்ந்தது.[3]2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 889,000 மக்கள் காரோ மொழியைப் பேசுகிறார்கள்.வங்காளதேசத்தில் 130,000 மக்கள் காரோ மொழியை பேசுகிறார்கள்.இம்மொழி மேகாலயா மாநிலத்தின் அலுவல் மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. காரோ at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Garo". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. (Joseph and Burling 2006: 1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரோ_மொழி&oldid=2191634" இலிருந்து மீள்விக்கப்பட்டது