கழுத்துப்பட்டை மீன்கொத்தி
கழுத்துப்பட்டை மீன்கொத்தி | |
---|---|
![]() | |
Todiramphus chloris humii லேம் பாக் பியா, பெட்சபுரி, தாய்லாந்து | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Todiramphus |
இனம்: | Template:Taxonomy/TodiramphusT. chloris
|
இருசொற் பெயரீடு | |
Todiramphus chloris (Boddaert, 1783) | |
வேறு பெயர்கள் | |
|
கழுத்துப்பட்டை மீன்கொத்தி ( Todiramphus chloris ) என்பது ஒரு நடுத்தர அளவிலான மீன் கொத்தி ஆகும். இது ஹல்சியோனினே, மர மீன்கொத்தி என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இது வெள்ளை கழுத்துப்பட்டை மீன்கொத்தி, கருப்பு முகமூடி மீன்கொத்தி, சதுப்புநில மீன்கொத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது செங்கடலில் இருந்து தெற்காசியா முழுவதும் பொலினீசியா வரை பரவியுள்ளது. இந்த இனத்தில் இருந்து பசிபிக் மீன்கொத்தி, ஐலெட் மீன்கொத்தி, டோரேசியன் மீன்கொத்தி, மரியானா மீன்கொத்தி, மெலனேசியன் மீன்கொத்தி உட்பட பல துணையினங்கள் மற்றும் கிளையினக் குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
வகையினங்கள்
[தொகு]1780 ஆம் ஆண்டில், பிரெஞ்சு அறிவுஜீவியான ஜார்ஜஸ்-லூயிஸ் லெக்லெர்க், காம்டே டி பஃப்ஃபோன் தனது ஹிஸ்டோயர் நேச்சர்ல் டெஸ் ஓய்சாக்சில் கழுத்துப்பட்டை மீன்கொத்தியை விவரித்தார். பஃப்பனின் விளக்கத்தில் அறிவியல் பெயர் சேர்க்கப்படவில்லை. 1783 இல் டச்சு இயற்கை ஆர்வலர் பீட்டர் போடார்ட் தனது பிளாஞ்சஸ் என்லுமினீஸ் பட்டியலில் அல்சிடோ குளோரிஸ் என்ற அறிவியல் பெயரை உருவாக்கினார். தற்போதைய பேரினப் பெயரான Todiramphus 1827 இல் பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணரும் இயற்கை ஆர்வலருமான ரெனே லெசன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இப்பறவையின் அறிவியல் பெயரில் உள்ள குளோரிஸ் என்ற அடைமொழியானது நவீன லத்தீன் மொழியில் 'பச்சை' என்பதாகும்.
துணையினங்களின் பட்டியல்
[தொகு]செங்கடலில் இருந்து பொலினீசியா வரையில் கடலோரங்களிலும், தனித்தனி வாழிட எல்லையிலும் பல துணையினங்கள் உள்ளன:[3][4]
செங்கடல் மற்றும் அரேபிய கடற்கரைகள்
[தொகு]- T. c. abyssinicus (பெல்செல்ன், 1856) - சோமாலியா மற்றும் அறபுத் தீபகற்பத்தின் தெற்கு செங்கடல் கடற்கரைகள்
- T. c. kalbaensis (Cowles, 1980) – வடகிழக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வடக்கு ஓமான் [5] கடற்கரைகள்
இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல்
[தொகு]- மலபார் கழுத்துப்பட்டை மீன்கொத்தி T. c. vidali (ஷார்ப், 1892) - மேற்கு இந்தியா இரத்தினகிரி முதல் கேரளம் வரை.[5]
- T. c. davisoni (ஷார்ப், 1892) - அந்தமான் தீவுகள் மற்றும் கோக்கோ தீவுகள் ( வங்காள விரிகுடாவில், மியான்மருக்கு தெற்கே) [5]
- T. c. occipitalis (பிளைத், 1846) - நிக்கோபார் தீவுகள்
தென்கிழக்கு ஆசியா
[தொகு]- T. c. humii (ஷார்ப், 1892) – மேற்கு வங்காளத்தின் கடற்கரைகளில் இருந்து கிழக்கு நோக்கி பர்மா ( மெர்குய் தீவுக்கூட்டம் உட்பட), மலாய் தீபகற்பம், தியோமான் தீவு மற்றும் வடகிழக்கு சுமாத்திரா வரை.[5]
- T. c. armstrongi (ஷார்ப், 1892) - பர்மா மற்றும் தாய்லாந்து, இந்தோசீனா மற்றும் கிழக்கு சீனாவின் உட்புறம் [5]
- T. c. laubmannianus (Grote, 1933) – சுமாத்திரா (வடகிழக்கு தவிர்த்து) மற்றும் போர்னியோ, இடைப்பட்ட தீவுகள் உட்பட.[5]
- T. c. chloropterus (ஓபர்ஹோல்சர், 1919) - மேற்கு சுமாத்திராவிற்கு அப்பால் உள்ள தீவுகள்
- T. c. azelus (ஓபர்ஹோல்சர், 1919) – எங்கானோ (தென்மேற்கு சுமத்ராவுக்கு வெளியே) [5]
- T. c. palmeri (Oberholser, 1919) – சாவகம், பாலி, பாவான் மற்றும் காங்கேயன் தீவுகள் [5]
- T. c. collaris (ஸ்கோபோலி, 1786) - பலவான் மற்றும் அருகிலுள்ள தீவுகள் உட்பட பிலிப்பீன்சு.[5]
வாலேசியா, நியூ கினியா
[தொகு]- T. c. chloris (Boddaert, 1783) - தாலத் மற்றும் சங்கியே தீவுகள் சுலாவெசி வழியாக சிறு சுண்டாத் தீவுகள் ( உலொம்போக்கிலிருந்து கிழக்கு), மேற்கு பப்புவான் தீவுகள் மற்றும் வடமேற்கு நியூ கினி ( வோகெல்காப் மற்றும் ஓனின் தீபகற்பங்கள்).[5]
மைக்ரோனேசியா
[தொகு]- T. c. teraokai (நாகமிச்சி குரோடா, 1915) - பலாவு
விளக்கம்
[தொகு]
கழுத்துப்பட்டை மீன்கொத்தி சுமார் 23 முதல் 25 cm (9.1 முதல் 9.8 அங்) நீளம் இருக்கும். ஆண் பறவையின் எடை 51 முதல் 90 g (1.8 முதல் 3.2 oz) இருக்கும், பெண் பறவையின் எடை 54–100 கிராம் (1.9–3.5 அவுன்ஸ்) எடையும் இருக்கும்.[5] இதன் மேற்பகுதி பசுமை கலந்த நீல நிறத்தில் இருக்கும். அடிப்பகுதி வெள்ளையாகவோ அல்லது பழுப்பு கலந்த மஞ்சளாகவோ இருக்கலாம். கழுத்தின் பக்கங்களிலும் மேல் பகுதியில் ஒரு பெரிய வெள்ளை நிறப் பட்டை உள்ளது. இந்தப் பட்டையே இப்பறவையின் பெயருக்கு காரணமாயிற்று. சில துணையினங்களின் கண்ணின் மேல் வெள்ளை அல்லது பழுப்பு கலந்த மஞ்சள்பட்டை இருக்கும், மற்றவை கண்ணுக்கும் அலகுக்கும் இடையில் ஒரு வெள்ளைப் புள்ளியைக் கொண்டிருக்கும்.[5] கண் வழியாக ஒரு கருப்பு பட்டை செல்லும். இதன் பெரிய அலகு கருப்பு நிறத்திலும் அடிப்பாகம் வெளிர் மஞ்சள் நிறம் தோய்ந்தும் காணப்படும். பெண் பறவைகளின் உடல் நிறம் ஆண் பறவைகளின் உடலை விட அதிகப்படியாக பசுமை தோய்ந்து இருக்கும். முதிர்ச்சியடையாத பறவைகளின் கழுத்திலும் மார்பகங்களிலும் கருமையான கறைகளுடன் முதிர்ந்த பறவைகளை விட மங்கிய நிறத்தில் இருக்கும்.
இவற்றின் அழைப்புகள் புவியியல் ரீதியாக மாறுபடுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பொதுவான அழைப்பானது உரத்து, கடுமையான உலோக ஒலி போன்று "கீ-கீ-கீ" என பல முறை திரும்பத் திரும்ப ஓசை எழுப்புவதாக இருக்கும்.[5]

பரவலும் வாழ்விடமும்
[தொகு]இது பொதுவாக கடலோரப் பகுதிகளில், குறிப்பாக அலையாத்தித் தாவரங்கள் உள்ள சதுப்பு நிலங்களில் காணப்படுகிறது. மேலும் இது வேளாண் நிலங்கள், திறந்த மரக்காடு, புல்வெளி மற்றும் தோட்டங்களிலும் வாழ்கிறது. இப்பறவைகள் பெரும்பாலும் கம்பிகள், பாறைகள் அல்லது வெற்று கிளைகள் மீது அமர்ந்திருக்கும்.

உணவு
[தொகு]
கடலோரப் பகுதிகளில் இருக்கும்போது இப்பறவைகளின் விருப்பமான உணவாக சிறிய நண்டுகள் மற்றும் இறால்கள் ஆகியவை ஆகும். ஆனால் இவை பூச்சிகள் (வண்டுகள், சிள்வண்டுகள், குச்சி-பூச்சிகள், வெட்டுக்கிளிகள், அந்துப்பூச்சிகள் பட்டாம்பூச்சிகள் உட்பட), சிலந்திகள், மண்புழுக்கள், நத்தைகள், தவளைகள், சிறிய பல்லிகள் உட்பட பலவகையான விலங்குகளையும் உண்கின்றன. பாம்புகள், சிறிய மீன்கள் மற்றும் சில நேரங்களில் சிறிய பறவைகள் மற்றும் எலிகளையும் உண்கின்றன.[5] கழுத்துப்பட்டை மீன்கொத்திகள் இரையை எதிர்பார்த்து நீண்ட நேரம் கிட்டத்தட்ட அசையாமல் அமர்ந்திருக்கும். இது தன் இரையைக் கண்டால், அதைப் பிடிப்பதற்காக கீழே பாய்ந்து பிடித்து, பின்னர் தான் அமர்ந்திருந்த கிளைக்கு மீண்டும் வந்து சேரும்.[5] தன் உணவின் செரிக்க முடியாத எந்த எச்சங்களையும் சிறு உருண்டைகளாக வெளியேற்றும்.
இனப்பெருக்கம்
[தொகு]இவை தன் கூட்டை மரத்தில் இயற்கையாக அமைந்த பொந்து, கறையான் புற்று அல்லது நீர் நிலையின் கரையில் இவற்றால் தோண்டப்பட்ட துளையில் அமைக்கின்றன.[5] இவை மரங்கொத்தியின் பழைய பொந்துகளையும் பயன்படுத்திக் கொள்ளும். பொதுவாக கூட்டில் இரண்டு முதல் ஐந்து வெண்ணிற முட்டைகளை இடும். முட்டைகளை அடைகாப்பதிலும், குஞ்சுகளை உணவளித்து வளர்பத்திலும் பெற்றோர்கள் இரண்டும் பங்கு கொள்கின்றன. குஞ்சு பொரித்த 44 நாட்களுக்குப் பிறகு இளம் பறவைகள் கூட்டை விட்டு வெளியேறுகின்றன.[5] பெரும்பாலும் ஒரு ஆண்டில் இரண்டு குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன.
பாதுகாப்பு நிலை
[தொகு]இதன் பரவலான வாழிட எல்லை மற்றும் ஏராளமான பறவை எண்ணிக்கையால்,[5] கழுத்துப் பட்டை மீன்கொத்தி செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2019). "Todiramphus chloris". IUCN Red List of Threatened Species 2019: e.T22683399A155541475. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683399A155541475.en. https://www.iucnredlist.org/species/22683399/155541475. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ René Lesson (1827). "Description d'un nouveau genre d'oiseau. Todirhamphe, Todiramphus" (in fr). Bulletin des sciences naturelles et de géologie 12: 268–271 [269]. https://www.biodiversitylibrary.org/page/43065665.
- ↑ "Collared Kingfisher (Todiramphus chloris)". Internet Bird Collection (HBW 6, p.219). Lynx Editions. Retrieved 2012-06-03.
- ↑ D. Donsker, ed. (2020). "IOC World Bird List (v 10.1)". doi:10.14344/IOC.ML.10.1. Retrieved 2020-07-06.
{{cite web}}
: Missing|editor1=
(help) - ↑ 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 5.17 Woodall, P. F. (2020).
வெளி இணைப்புகள்
[தொகு]
- Photos, audio and video of collared kingfisher from Cornell Lab of Ornithology's Macaulay Library
- Recordings of collared kingfisher from Xeno-canto sound archive
- Collared kingfisher photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Todiramphus chloris at IUCN Red List maps