கோக்கோ தீவுகள்

ஆள்கூறுகள்: 14°03′N 93°21′E / 14.05°N 93.35°E / 14.05; 93.35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோக்கோ தீவுகள்
உள்ளூர் பெயர்: Coco Islands
ကိုကိုးကျွန်း
கோக்கோ தீவுகள் is located in மியான்மர்
கோக்கோ தீவுகள்
கோக்கோ தீவுகள்
மியான்மரிலும், வங்காள விரிகுடாவிலும் கோக்கோத் தீவுகளின் அமைவிடம்
கோக்கோ தீவுகள் is located in Bay of Bengal
கோக்கோ தீவுகள்
கோக்கோ தீவுகள்
கோக்கோ தீவுகள் (Bay of Bengal)
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்14°03′N 93°21′E / 14.05°N 93.35°E / 14.05; 93.35
தீவுக்கூட்டம்கோக்கோத் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஅந்தமான் கடல்
மொத்தத் தீவுகள்7
முக்கிய தீவுகள்
 • பெரும் கோக்கோ
 • சிறிய கோக்கோ
பரப்பளவு20.54 km2 (7.93 sq mi)
உயர்ந்த ஏற்றம்112 m (367 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை950
அடர்த்தி46.25 /km2 (119.79 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
 • மியன்மார் சீர்நேரம் (UTC+6:30)
ISO குறியீடுMM-06

கோக்கோ தீவுகள் (Coco Islands, கொக்கோ தீவுகள், பர்மியம்: ကိုကိုးကျွန်း) என்பது வங்காள விரிகுடாவின் வடகிழக்கே அமைந்துள்ள சிறிய தீவுக்கூட்டம் ஆகும். இவை மியான்மரின் யங்கோன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். இத்தீவுகள் யங்கோன் நகரில் இருந்து தெற்கே 414 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன. கொக்கோத் தீவுக் கூட்டத்தில் 5 தீவுகள் உள்ளன. இவற்றில் நான்கு தீவுகள் பெரும் கோக்கோ கடலடிப்பாறையிலும், மற்றைய தனிமைப்படுத்தப்பட்ட தீவு சிறிய கோக்கோ கடலடிப்பாறையிலும் அமைந்துள்ளன. இத்தீவுக் கூட்டத்தின் வடக்கே பிரெப்பாரிசு என்ற மியன்மாரின் இன்னும் ஒரு தீவு உள்ளது. தெற்கே இந்தியாவுக்குச் சொந்தமான கரைசேர் தீவு காணப்படுகிறது.

வரலாறு[தொகு]

இத்தீவுகளுக்கான தற்போதைய பெயர் 16-ஆம் நூற்றான்டின் போர்த்துக்கீச மாலுமிகளின் மூலம் வைக்கப்பட்டது. போர்த்துக்கீச மொழியில் கோக்கோ என்பது தென்னையைக் குறிக்கும். அந்தமான் தீவுகளை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 18-ஆம் நூற்றாண்டில் கைப்பற்றியது. 19-ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய இந்திய அரசு அந்தமான்களில் குற்றவாளிகளின் குடியேற்றத்தை நடத்தி வந்தது. இக்குடியேறிகளுக்கு கோக்கோ தீவுகளில் இருந்து தேங்காய் போன்ற உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. பிரித்தானிய அரசு இத்தீவுகளை மியான்மரின் யாதுவத் குடும்பத்திற்கு குத்தகை அடிப்படையில் கொடுத்திருந்தது.[1] இக்குடும்பம் யங்கோனின் குறிப்பிடத்தக்க ஒரு வணிகக் குடும்பம் ஆகும். இவர்கள் மாவலமயீனி, மெர்குயி போன்ற இடங்களிலும் வாழ்ந்து வந்தனர்.[2]

கோக்கோ தீவுகளின் தொலைநிலை காரணமாக, இவை முறையாக நிருவகிக்கப்படவில்லை. பிரித்தானியர் இதன் நிருவாகத்தை இரங்கூனின் கீழ் பர்மா அரசிடம் ஒப்படைத்தனர். 1882 இல் இத்தீவுகள் அதிகாரபூர்வமாக பிரித்தானிய பர்மாவின் ஆட்சியின் கீழ் வந்தது. 1937 இல் பர்மா இந்தியாவில் இருந்து பிரிந்து, தனியான சுயாட்சியுடன் கூடிய பிரித்தானிய மன்னராட்சியின் குடியேற்ற நாடாக ஆன போது, கோக்கோ தீவுகளும் பர்மாவின் கீழ் வந்தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1942 இல், சப்பான் இதனைக் கைப்பற்றி வைத்திருந்தது. 1948 இல் பர்மா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றதை அடுத்து, கோக்கோ தீவுகளும் புதிய பர்மிய ஒன்றியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

1959 இல் நே வின்னின் இடைக்கால இராணுவ ஆட்சியின் போது, இவை குற்றவாளிகளின் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1962 இல் இடம்பெற்ற நே வின்னின் இராணுவப் புரட்சியை அடுத்து, பர்மாவில் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. இதன் போது கோக்கோ தீவுகளின் சிறைகள் பர்மாவின் சாத்தான்களின் தீவுகள் என அறியப்பட்டன. 1969 இல் இங்கு அரசியல் கைதிகள் பெருமளவில் குடியேற்றப்பட்டனர். 1971 ஆம் ஆன்டில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து, இத்தீவுகளில் இருந்த அனைத்துக் கைதிகளும் இரங்கூனின் இன்செயின் சிறைக்கு மாற்றப்பட்டனர். இத்தீவுகளில் இருந்த சிறைச்சாலைகள் மூடப்பட்ட பின்னர், பெரும் கோக்கோ தீவு பர்மியக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டது.

1994 ஆம் ஆண்டு முதல் கோக்கோ தீவுகள் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.[3] பர்மிய அரசும், சீனாவும் இதனை மறுத்து வருகின்றன.[4]

புவியியல்[தொகு]

தீவுகளின் மேற்கே வங்காள விரிகுடா அமைந்துள்ளது, கிழக்கே அந்தமான் கடல் அமைந்துள்ளது. வடக்கே 250 கிமீ தூரத்தில் பர்மியப் பெருநிலப்பகுதி அமைந்துள்ளது. வட-வடகிழக்கே 77 கிமீ தூரத்தில் பிரெப்பாரிசு தீவு அமைந்துள்ளது.[5]

கோக்கோ தீவுகளில் பெரும் கோக்கோ தீவு, சிறிய கோக்கோ தீவு ஆகியன அலெக்சாந்திரா கால்வாயூடாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முக்கிய தீவான மேசைத் தீவு (Table Island) பெரும் கோக்கோ தீவுக்கு அருகில் அமைந்துள்ளது.[6] புவியியலின் படி, இவை அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியாகும். இவற்றுக்கு இடையில் இந்தியாவின் தீவான கரைசேர் தீவு அமைந்துள்ளது.

பெரும் கோக்கோ கடலடிப்பாறை[தொகு]

பெரும் கோக்கோ கடலடிப்பாறை (Great Coco reef) வடக்கில் இருந்து தெற்கு வரை செருப்புத் தீவு, மேசைத் தீவு, பெரும் கோக்கோ தீவு, ஜெரித் தீவு ஆகிய நான்கு தீவுகளைக் கொண்டுள்ளது.

பெரும் கோக்கோ தீவு[தொகு]

பெரும் கோக்கோ தீவு (Great Coco Island, 14°07′00″N 93°22′03″E / 14.11667°N 93.36750°E / 14.11667; 93.36750) 10.4 கிமீ (6.5 மைல்) நீலமும், 2 கிமீ (1.2 மைல்) அகலமும் கொண்டது. இதன் கடற்கரைப் பகுதிகளில் தோணியாமைகளின் பல கூடுகளைக் காணலாம். கடல் ஆமை பாதுகாப்பு குறித்த தொடர் ஆய்வுத் திட்டங்கள் பர்மிய அரசினால் நடத்தப்பட்டுள்ளன. மக்கள்தொகை மரபணு மற்றும் குறிச்சொல் ஆய்வுகளுக்காக பச்சை ஆமைகளின் திசு மாதிரிகள் பற்றிய தரவு சேகரிப்பு இங்கு 2006 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டன.

மேசைத் தீவு[தொகு]

மேசைத் தீவு (Table Island) கோடரியின் முனையின் வடிவத்தை ஒத்தது. பெரும் கோக்கோ தீவில் இருந்து வடக்கே 2.5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது 1.6 கிமீ நீளமும், 1.2 கிமீ அகலமும் கொண்டது. இதன் வடமேற்குப் பகுதியில் முன்னர் கலங்கரை விளக்கம் காணப்பட்டது. ஆனால், இப்போது அங்கு மக்கள் எவரும் வசிப்பதில்லை.[6] இவ்விளக்கம் 1867 இல் கட்டப்பட்டது. இதன் குவியத் தளம் 59 மீ ஆகும்.[7] இத்தீவிற்கு படகு மூலம் செல்லலாம், இத்தீவின் முன்னாள் காப்பாளர் அவரது உரிமையாளரால் படுகொலை செய்யப்பட்டார்.

செருப்புத் தீவு[தொகு]

செருப்புத் தீவு (Slipper Island) 0.4 கிமீ நீளமான ஒடுங்கிய சிறு தீவு ஆகும். இது மேசைத் தீவின் வடமேற்கே 0.2 கிமீ அகல கால்வாய் ஒன்றினால் பிரிக்கப்பட்டுள்ளது.[5][8]

ஜெரி தீவு[தொகு]

ஜெரி தீவு (Jerry Island) 1.1 மீ நீளமும், 0.2 மீ அகலமும் கொண்டது. பெரும் கோக்கோ தீவின் தென்முனையில் அமைந்துள்ளது.[9] பெரும் கோக்கோ தீவில் இருந்து இவற்றை இணைக்கும் மணல்திட்டு வழியே நடந்தே செல்லலாம்.

சிறிய கோக்கோ கடலடிப்பாறை[தொகு]

சிறிய கோக்கோ கடலடிப்பாறையில் (Little Coco Reef) ஒரு தீவு மட்டுமே உள்ளது.

சிறிய கோக்கோ தீவு[தொகு]

சிறிய கோக்கோ தீவு (Little Coco Island) பெரும் கோக்கோ தீவில் இருந்து 16 கிமீ தென்மேற்கே அமைந்துள்ளது. இது 5 கிமீ நீளமும், 1.2 கிமீ அகலமும் கொண்டது. அந்தமான் கடலில் மியான்மரின் மிகவும் தெற்கே அமைந்துள்ள தீவு இதுவாகும்.

பொதுத் தரவுகள்[தொகு]

Island சிரப்புகள் பரப்பளவு (கிமீ²) மக்கள்தொகை
பெரும் கோக்கோ தீவு 14°06′00″N 93°21′54″E / 14.10°N 93.365°E / 14.10; 93.365 வானூர்தி நிலையம், தென்னந்தோப்புகள், சீன SIGINT நிலையம் (இருக்கலாம்) 14.57 925
சிறிய கோக்கோ தீவு 13°59′17″N 93°13′30″E / 13.988°N 93.225°E / 13.988; 93.225 தென்னந்தோப்புகள் 4.44 25
மேசைத் தீவு 14°11′06″N 93°21′54″E / 14.185°N 93.365°E / 14.185; 93.365 கலங்கரைவிளக்கம் 1.28 0
செருப்புத் தீவு 14°11′24″N 93°21′25″E / 14.19°N 93.357°E / 14.19; 93.357 0.08 0
எலித் தீவு (Rat Island) 14°07′41″N 93°22′55″E / 14.128°N 93.382°E / 14.128; 93.382 0.015 0
திசையறிப் பாறை (Binnacle Rock) 14°09′00″N 93°22′19″E / 14.15°N 93.372°E / 14.15; 93.372 0.011 0
ஜெரி தீவு 14°03′00″N 93°21′54″E / 14.05°N 93.365°E / 14.05; 93.365 0.14 0
கோக்கோ தீவுகள் (மொத்தம்) 20.53 950

மக்கள் பரம்பல்[தொகு]

பெரும் கோக்கோ தீவில் கிட்டத்தட்ட 200 குடிமனைகள் உள்ளன. ஏறத்தாழ 1,000 பேர் வசிக்கின்றன. தீவில் உள்ள ஒரு பெரிய நீர்த்தேக்கம் தீவின் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கின்றது.[10] மியான்மரின் கடற்படைத் தளம் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இங்கு ஏறத்தாழ 200 கடற்படையினரும் அவர்களின் குடும்பத்தினரும் உள்ளனர்.

காலநிலை[தொகு]

கோக்கோ தீவுகளில் வெப்பமண்டலப் பருவமழைக்கான காலநிலை நிலவுகிறது. (கோப்பென் காலநிலை வகைப்பாடு Am). ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலை நிலவுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், கோக்கோ தீவுகள் (1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.6
(85.3)
30.0
(86)
31.0
(87.8)
32.6
(90.7)
32.3
(90.1)
30.7
(87.3)
30.3
(86.5)
30.0
(86)
30.2
(86.4)
30.8
(87.4)
31.0
(87.8)
30.0
(86)
30.7
(87.3)
தாழ் சராசரி °C (°F) 22.0
(71.6)
21.2
(70.2)
22.0
(71.6)
24.3
(75.7)
25.8
(78.4)
25.4
(77.7)
25.0
(77)
25.0
(77)
24.6
(76.3)
24.4
(75.9)
24.4
(75.9)
23.2
(73.8)
23.9
(75)
பொழிவு mm (inches) 2.2
(0.087)
5.2
(0.205)
13.2
(0.52)
37.0
(1.457)
240.0
(9.449)
456.3
(17.965)
418.3
(16.469)
438.8
(17.276)
380.2
(14.969)
184.3
(7.256)
138.3
(5.445)
23.0
(0.906)
2,336.8
(92)
Source #1: நோர்வே வளிமண்டலவியல் நிலையம்[11]
Source #2: உலக வளிமண்டலவியல் அமைப்பு[12]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.idsa.in/system/files/book/book_andman-nicobar.pdf
 2. http://jadwet.com/history-of-jadwets.php
 3. John Pike, [www.fas.org/irp/world/china/facilities/coco.htm "Coco Island - Chinese Intelligence Agencies"], Federation of American Scientists.
 4. Selth, Andrew, "Chinese Whispers: The Great Coco Island Mystery" பரணிடப்பட்டது 5 மார்ச் 2008 at the வந்தவழி இயந்திரம், Irrawaddy BurmaNet News, 9 January 2007.
 5. 5.0 5.1 https://books.google.com/books?id=hWv9ZhMhgusC&pg=PA223&lpg=PA223&dq=preparis+island&source=bl&ots=di8ZTolvqW&sig=pXsh3BAAycobCIaSpH6zwFhecM0&hl=iw&sa=X&ved=0ahUKEwig9oqjsp3MAhWCNpoKHSSKAUcQ6AEIUjAJ#v=onepage&q=coco%20islands&f=false Prostar Sailing Directions 2005 India & Bay of Bengal Enroute, National Geospatial-Intelligence Agency
 6. 6.0 6.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 7. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 8. கூகுள் எர்த்
 9. Mapcarta - Great Coco Island
 10. News
 11. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 12. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோக்கோ_தீவுகள்&oldid=3551949" இருந்து மீள்விக்கப்பட்டது