மரக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரக்காடுகள்.

மரக்காடுகள் என்பவை (English: Woodlands) பெருங்காடுகளை விட அடர்த்தி குறைந்த காட்டுப் பகுதிகளாகும். அங்கு அதிகளவு சூரிய வெளிச்சம் காணப்படுவதோடு, குறைவான நிழல்களே இருக்கும். இத்தகைய காடுகளில் அதிகளவிலான புதர்ச்செடிகளும், இளம்போத்தல் குட்டைச் செடிகளுமே காணப்படும். வறட்சியான காலகட்டங்களில் மரக்காடுகள் புதர்க்காடுகளாக மாறிவிடும்.

மரக்காடுகள் காக்கப்பட வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதற்காகக் கடுமையாக முயன்றும் வருகின்றனர். வடமேற்கு இந்தியானாவில் அமைந்திருக்கும் இந்தியானா பாலைவனப் பகுதியில் அழியும் நிலையிலிருந்த மரக்காடுகளைச் சூழலியல் ஆர்வலர்கள் மீட்டெடுத்திருக்கின்றனர். [1][2][3]

குறிப்புகள்[தொகு]

  1. Smith, S. & Mark, S. (2006).
  2. Smith, S. & Mark, S. (2009).
  3. Smith, S. & Mark, S. (2007).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்காடு&oldid=2747175" இருந்து மீள்விக்கப்பட்டது