சுப்பிரமணியம் சீனிவாசன்
(எஸ். எஸ். வாசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
சுப்பிரமணியம் சீனிவாசன் Subramaniam Srinivasan | |
---|---|
![]() இந்திய அஞ்சல் தலை | |
பிறப்பு | சனவரி 4, 1903 திருத்துறைப்பூண்டி, திருவாரூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | ஆகத்து 26, 1969 மதராசு, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 66)
சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் (சனவரி 4, 1903 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படுபவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் . இவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது. ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவரது இறப்பு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே. அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.
வாசன் இயக்கிய திரைப்படங்கள்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
1948 | சந்திரலேகா | தமிழ் | ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி | - |
1948 | சந்திரலேகா | இந்தி | ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி | - |
1949 | நிஷான் | இந்தி | பி. பானுமதி, ரஞ்சன் | - |
1951 | சன்சார் | இந்தி | டேவிட் ஏபிரகாம் | |
1952 | மிஸ்டர் சம்பத் | இந்தி | மோதிலால், பத்மினி | - |
1954 | பாகுட் டின் ஹூயே | இந்தி | மதுபாலா | |
1955 | இன்சானியாட் | இந்தி | திலிப் குமார் | - |
1958 | வஞ்சிக்கோட்டை வாலிபன் | தமிழ் | ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, பத்மினி | - |
1958 | ராஜ் திலக் | இந்தி | ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா | - |
1959 | பாயிகம் | இந்தி | திலிப் குமார், வைஜயந்திமாலா | - |
1960 | இரும்புத்திரை | தமிழ் | சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா | - |
1961 | கர்ணா | இந்தி | ராஜேந்திர குமார், ராஜ் குமார் | - |
1967 | அவுரத் | இந்தி | ராஜேஷ் கண்ணா, பத்மினி | - |
1968 | தீன் பகுரானியன் | இந்தி | பிருத்விராஜ் கபூர் | - |
1969 | சத்ரஞ் | இந்தி | ராஜேந்திர குமார் | - |
வாசன் தயாரித்த திரைப்படங்கள்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
1953 | ஔவையார் | தமிழ் | கே. பி. சுந்தராம்பாள் | - |
உசாத்துணை[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- பத்ம பூசண் விருது பெற்றவர்கள்
- இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
- 1903 பிறப்புகள்
- 1969 இறப்புகள்
- தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்
- தமிழகத் தொழிலதிபர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- திருவாரூர் மாவட்ட நபர்கள்