உருத்ராக்ச ஜபால உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருத்ராக்ச ஜபால உபநிடதம்
உருத்ராக்ச விதைகள்
தேவநாகரிरुद्राक्षजाबाल
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புrudrākṣa
இயற்றியோர்காலாக்னி உருத்திரன் மற்றும் சனகாதி முனிவர்கள்.
உபநிடத வகைசைவம்
தொடர்பான வேதம்சாம வேதம்

உருத்ராக்ச ஜபால உபநிடதம் ( Rudrakshajabala Upanishad ) உருத்ராக்ச ஜபாலோபனிஷத், உருத்ராக்ச உபநிஷத் உருத்ராக்ஷோபநிஷத் என்றும் அறியப்படும் இது, சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட 108 உபநிடத இந்து வேதங்களில் ஒன்றாகும். இது சிவபெருமானுக்கு புனிதமான மணிகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு விதையான உருத்ராட்சத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த வேதம் சிவனை வழிபடும் சைவப் பிரிவைச் சேர்ந்தது மற்றும் சாம வேதத்துடனும் தொடர்புடையது. [1] 14 சைவ உபநிடதங்களில் ஒன்றான இது சிவனின் வடிவமான காலாக்னி உருத்திரனுக்கும் சனகாதி முனிவர்களில் ஒருவரான சனத்குமாரன் என்றும் அழைக்கப்படும் பூசுந்த முனிவருக்கும் நடந்த உரையாடலாக சொல்லப்படுகிறது.

உள்ளடக்கம்[தொகு]

இந்த உபநிடதம், உடலின் அனைத்து பாகங்கள், பஞ்ச பிராணன் (ஆன்மா) மற்றும் பேச்சு ஆகியவற்றின் நல்வாழ்வுக்கான உன்னத யதார்த்தமான பிரம்மனுக்கான அழைப்போடு தொடங்குகிறது. அமைதிக்கான விருப்பத்துடன் பாடல் முடிவடைகிறது.[2]

உருத்ரனின் கண்ணீர்[தொகு]

சனத்குமாரன் என்றும் அழைக்கப்படும் பூசுந்த முனிவர், பைரவருடன் அடையாளம் காணப்பட்ட சிவனின் அழிவு வடிவமான காலாக்னி உருத்ரனிடம் உருத்ராட்சத்தின் தோற்றம் மற்றும் அதை அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கேட்கிறார். திரிபுரத்தின் (மூன்று நகரங்கள்) அழிவுக்காக, அவர் ஆயிரம் ஆண்டுகள் தியானத்தில் கண்களை மூடிக்கொண்டார் என்றும் அவரது கண்களில் இருந்து கண்ணீர் பூமியில் விழுந்து, உருத்ராட்சத்தை உருவாக்கியது எனவும் கடவுள் பதிலளிக்கிறார். "உருத்ராட்சம்" என்ற வார்த்தையின் உச்சரிப்பு பத்து பசுக்களை தானம் செய்த புண்ணியத்தை அளிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அதன் பார்வையும் தொடுதலும் இருபது பசுக்களின் தொண்டுக்கு சமம் எனவும் கூறப்படுகிறது.[3][4][5][6]

சான்றுகள்[தொகு]

  1. Farquhar, John Nicol (1920), An outline of the religious literature of India, H. Milford, Oxford university press, p. 364, ISBN 81-208-2086-X
  2. "Rudraksha Jabala". Rudrahouse. பார்க்கப்பட்ட நாள் 11 July 2020.
  3. Kamal Narayan Seetha (1 January 2008). The Power Of Rudraksha. Jaico Publishing House. பக். 222–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7992-844-8. https://books.google.com/books?id=mz9IZFX8Gi0C&pg=PT222. 
  4. "Rudraksha Jabala Upanishad". Vedanta Spiritual Library. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
  5. R. A. Sastri. "RUDRAKSHAJABALA UPANISHAT". பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
  6. Shantha N. Nair (1 January 2008). Echoes of Ancient Indian Wisdom. Pustak Mahal. பக். 224–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-223-1020-7. 

வெளி இணைப்புகள்[தொகு]