இந்தியாவின் பண்பாட்டு மண்டலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் பண்பாட்டு மண்டலங்கள் என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால்[1] வரையறுக்கப்பட்ட ஏழு மண்டலங்களாகும்.[2] இந்த மண்டலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மண்டல மையம் தலைமை மையமாகச் செயல்படுகிறது.[3] பெரும்பாலான மண்டல மையங்கள் 1985ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் அறிவிக்கப்பட்டு 1986-87 காலகட்டத்தில் முறையாகச் செயல்படத் தொடங்கியது. "இந்தியக் கலாச்சாரத்தின் புராதன வேர்களை வலுப்படுத்துவதும், ஒருங்கிணைந்த தேசியக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதும் வளப்படுத்துவதும் " இவற்றின் குறிக்கோளாக உள்ளது.[4]

கொல்கத்தா நகரம், முன்னர் பிரித்தானிய இந்தியா மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகராக இருந்தது. இது "இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரம்" என்றும் அழைக்கப்படுகிறது.[5]

மண்டலங்கள்[தொகு]

ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மண்டலத் தலைமையகம் உள்ளது. இங்கு ஒரு மண்டலக் கலாச்சார மையம் நிறுவப்பட்டுள்ளது.[3] பல மாநிலங்கள் பல மண்டலங்களில் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் மண்டலப் பிரிவுகளில் எந்த மாநில உட்பிரிவுகளும் பயன்படுத்தப்படவில்லை. இவை பொறுப்பேற்றுள்ள மண்டலங்களின் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு, ஒவ்வொரு மண்டல மையமும் செயல்பாடுகளை ஏற்பாடு செய்வதன் மூலமும், பிற மண்டலங்களிலிருந்து கலைஞர்களை அழைப்பதன் மூலமும் இந்தியாவின் பிற கலாச்சாரங்களை ஊக்குவிப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் பாலமாகச் செயல்படுகிறது.  

மண்டலம் மண்டல மையம் சேவைப் பகுதி
வடக்கு பண்பாட்டு மண்டலம் வடக்கு மண்டல பண்பாட்டு மையம், பட்டியாலா, பஞ்சாப் சண்டிகர், அரியானா, இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர், இலடாக்கு, பஞ்சாப், இராசத்தான், உத்தராகண்டம்[6]
வட மத்திய பண்பாட்டு மண்டலம் வட-மத்திய மண்டல பண்பாட்டு மையம், பிரயாக்ராஜ், உத்தரபிரதேசம் பீகார், தில்லி, அரியானா, மத்தியப் பிரதேசம், இராசத்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்ம்[7]
கிழக்கு பண்பாட்டு மண்டலம் கிழக்கு மண்டல கலாச்சார மையம், கொல்கத்தா, மேற்கு வங்காளம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அசாம், பீகார், சார்க்கண்டு, மணிப்பூர், ஒடிசா, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம் [8]
வடகிழக்கு பண்பாட்டு மண்டலம் வடகிழக்கு மண்டல கலாச்சார மையம், சமுகெடிமா, நாகாலாந்து அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா[9][10]
தென்னக பண்பாட்டு மண்டலம் தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர், தமிழ்நாடு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, இலட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்காணா[11]
தென் மத்திய பண்பாட்டு மண்டலம் தென்-மத்திய மண்டல கலாச்சார மையம், நாக்பூர், மகாராஷ்டிரா ஆந்திரா, சத்தீசுகர், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், தெலங்காணா
மேற்கு பண்பாட்டு மண்டலம் மேற்கு மண்டல கலாச்சார மையம், உதய்பூர், இராசத்தான் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குசராத்து, மகாராட்டிரம், இராசத்தான்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zonal Cultural Centers". Ministry of Culture. Archived from the original on 2011-08-08.
  2. West Zone Culture Center, West Zone Culture Centre, பார்க்கப்பட்ட நாள் 2010-12-15, ... West Zone Cultural Centre (WZCC) with its headquarters at Udaipur is one of the seven Zonal Cultural Centres set up during 1986–87, under the direct initiative of the Ministry of Human Resource Development, Govt. of India ...
  3. 3.0 3.1 South Zone Culture Center: Other Zones, South Zone Culture Centre, archived from the original on 2011-03-03, பார்க்கப்பட்ட நாள் 2010-12-15, ... North East Zone Cultural Centre – Nagaland – Assam, Tripura, Manipur, Arunachal Pradesh, Nagaland & Meghalaya ...
  4. North Zone Culture Center, North Zone Culture Centre, பார்க்கப்பட்ட நாள் 2010-12-15, ... Rajiv Gandhi inaugurated the North Zone Cultural Center on 6th Nov. 1985 the then Prime Minister of India ... one of the seven cultural centers established in the country to strengthen the ancient roots of Indian Culture and evolve and enrich composite National Culture ... Punjab, Haryana, Himachal Pradesh, Jammu & Kashmir, Uttrakhand, Rajasthan & Chandigarh (U.T.) ...
  5. "Kolkata-the cultural capital of India". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-25.
  6. "North Zone Cultural Centre". culturenorthindia. பார்க்கப்பட்ட நாள் 22 November 2021.
  7. "NCZCC – North Central Zone Cultural Centre, Prayagraj, Uttar Pradesh". nczcc. பார்க்கப்பட்ட நாள் 22 November 2021.
  8. "Eastern Zonal Cultural Centre". www.ezcc-india.org. Archived from the original on 15 January 2022. பார்க்கப்பட்ட நாள் 22 November 2021.
  9. "North East Zonal Cultural Centre". www.nezccindia.org.in. பார்க்கப்பட்ட நாள் 22 November 2021.
  10. "Govt notifies jurisdiction for three new districts". MorungExpress. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  11. "Inauguration of SĀDHANĀ". szccindia.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 November 2021.

வெளி இணைப்புகள்[தொகு]