மண்டலக் குழு
Appearance
மண்டலக் குழுக்கள் அல்லது வலயக் குழுக்கள் (Zonal Councils) இந்திய மாநில மறுசீரமைப்புச் சட்டம், ஆண்டு 1956இன் படி, இந்திய மாநிலங்களை ஆறு மண்டலங்களாக பிரித்தனர். மண்டலத்திலுள்ள மாநிலங்களிடையே உள்ள பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூறுவதே மண்டலக் குழுக்களின் பணியாகும். வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு பிரச்சனைகளை களைவதற்கும், பிணக்குகளையும் தீர்ப்பதற்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கிட 1971ஆம் ஆண்டில் வடகிழக்கு மண்டலக் குழு அமைக்கப்பட்டது.[1] தற்போதுள்ள மண்டல குழுக்களும் மற்றும் அதனில் அடங்கும் மாநிலங்களின் விவரம்:[2]
- வடக்கு மண்டலக் குழு: சண்டிகர், அரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான்
- மத்திய மண்டலக் குழு அல்லது வடமத்திய மண்டலக் குழு: பிகார், தில்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட்
- வடகிழக்கு மண்டலக் குழு: அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா
- கிழக்கு மண்டலக் குழு: மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், சிக்கிம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- மேற்கு மண்டலக் குழு: மகாராட்டிரா, குஜராத், கோவா, தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன், தியு
- தெற்கு மண்டலக் குழு: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி மற்றும் இலட்சத் தீவுகள்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 15 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 8 May 2012. பார்க்கப்பட்ட நாள் 7 March 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)