வடக்கு மண்டல பண்பாட்டு மையம்
Appearance
உருவாக்கம் | 1986-7 |
---|---|
வகை | பிராந்திய பண்பாட்டு மையம் |
நோக்கம் | கல்வி,கலை மற்றும் பண்பாட்டை பாதுகாத்து ஊக்குவித்தல் |
தலைமையகம் | |
வலைத்தளம் | www |
வடக்கு மண்டல பண்பாட்டு மையம் (North Zone Cultural Centre) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா நகரத்தில் அமைந்துள்ளது. கலை, கைவினைப்பொருட்கள், மரபுகள் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பல பிராந்திய கலாச்சார மையங்களில் வடக்கு மண்டல பண்பாட்டு மையம் முதன்மையானதாகும்.
1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 அன்று பஞ்சாபின் உசைனிவாலா கிராமத்திற்கு வருகை தந்தபோது அப்போதைய இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி வடக்கு மண்டல பண்பாட்டு மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்.
வடக்கு மண்டல பண்பாட்டு மையம் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள ஏழு கலாச்சார மண்டலங்களில் ஒன்றாகும். இந்திய அரசாங்கம் வரையறுக்கப்பட்ட மற்றும் நிர்வாக உள்கட்டமைப்பை இதற்கு வழங்கியுள்ளது.[1]
இந்தியாவின் மற்ற பிராந்திய பண்பாட்டு மண்டலங்கள்
[தொகு]- மேற்கு மண்டல கலாச்சார மையம் உதய்பூர், ராஜஸ்தான்
- வடகிழக்கு மண்டல கலாச்சார மையம், திமாபூர், நாகாலாந்து
- தென் மண்டல கலாச்சார மையம், தஞ்சாவூர், தமிழ்நாடு
- தென்-மத்திய மண்டல கலாச்சார மையம், நாக்பூர்
- வட மத்திய மண்டல கலாச்சார மையம், அலகாபாத், உத்தரப்பிரதேசம்
- கிழக்கு மண்டல கலாச்சார மையம், கொல்கத்தா, மேற்கு வங்காளம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ West Zone Culture Center, West Zone Culture Centre, பார்க்கப்பட்ட நாள் 2010-12-15,
... West Zone Cultural Centre (WZCC) with its headquarters at Udaipur is one of the seven Zonal Cultural Centres set up during 1986-87, under the direct initiative of the Ministry of Human Resource Development, Govt. of India ...