மார்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்பகமொன்றின் வெட்டுத் தோற்றம்
1 - மார்புச் சுவர், 2 - மார்புத் தசைநார்கள், 3 - பால் சுரக்கும் சுரப்பி, 4 - முலைக் காம்பு, 5 - முலைக் காம்புத் தோல், 6 - பாற்குளாய், 7 - கொழுப்பு, 8 - தோல்
குழந்தைக்குப் பாலூட்டும் தாய்; மேரி கசட் என்பவரால் வரையப்பட்டது. 1890

மார்பகம் என்பது பெண் பாலூட்டிகளில் காணப்படும் முக்கியமான உறுப்பு. பிறந்த குழந்தைகளுக்கு உணவாகப் பாலை உற்பத்தி செய்து வழங்குவது இதன் தொழிலாகும். பல பண்பாடுகளில் பெண்கள் மார்பகங்களை மறைத்து உடை அணிவதே பண்பாட்டுக்கு ஒத்தாகக் கருதப்படுவதுடன் சமூகத்தினால் இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பழங்குடி மக்களிடையே மார்பகங்களை மூடி உடையணியும் வழக்கம் இல்லை. ஆண் பாலூட்டிகள் குட்டிகளுக்குப் பாலூட்டுவது இல்லையாதலால் அவற்றுக்கு வளர்ச்சியடையாத மார்பகங்களே உண்டு.

[தொகு] வளர்ச்சியும் வடிவமும்

சிறுமிகளுக்கு மார்பகங்கள் வளர்ச்சியடையாத நிலையிலேயே இருக்கின்றன. அவர்கள் பூப்பெய்திய பின்னரே மார்பகங்கள் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இவற்றின் வடிவங்கள் பல்வேறுபட்டவையாக அமைகின்றன. இதற்கு மரபியற் காரணிகளும், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களின் அளவும், நொதியங்களும் காரணமாக அமைகின்றன.

குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் மார்பகங்கள் தளர்வடையத் தொடங்குகின்றன. குழந்தைகளுக்குப் பாலூட்டுவது இதனை விரைவுபடுத்தும் என்ற கருத்து நிலவினாலும், சில ஆய்வு முடிவுகள் இதனை மறுக்கின்றன. மார்பகங்களின் அளவு, கருவுற்ற தடவைகள், உடல் நிறைச் சுட்டெண், புகை பிடித்தல், வயது என்பன இவை தளர்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

[தொகு] அமைப்பு

மார்பகத்தின் ஒரு பகுதி சுரப்பியாகும். இது குழந்தை பெற்ற பெண்களில் அவற்றுக்கு உணவளிப்பதற்காகத் பாலை உற்பத்தி செய்கிறது. தாயின் மார்பகங்களில் உற்பத்தியாகும் பால் தாய்ப்பால் எனப்படுகின்றது. தாய்ப்பாலே குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்