விந்து வெளியேற்றுக் குழாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விந்து வெளியேற்றுக் குழாய்
ஆண் உடற்கூற்றியல்
நாளங்களின் அமைப்புக்களை காட்டிட விந்துச் சுரப்பியின் நெடுங்குத்து வெட்டுத்தோற்றம்.
கிரேயின்

subject #259 1245

முன்னோடி Wolffian duct
ம.பா.தலைப்பு Vas+Deferens

விந்து வெளியேற்றக் குழாய் (Vas Deferens) அல்லது விந்து நாளம் (ductus deferens) மனித உடலில் ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் ஓர் உறுப்பு. இவை விந்துச் சுரப்பிக்கு ஒன்றாக இரண்டு உள்ளன. இவை விந்து நாளத்திரளின் முடிவுப் பகுதியில் தோன்றும். விந்துச் சுரப்பியின் பின்புறத்தில் மேல்நோக்கி அமைந்திருக்கும். தசைக் குழாய்களான இவற்றைச் சுற்றி மென்மை தசைகள் உள்ளன. இடது மற்றும் வலது நாளத்திரள்களை விந்து பீச்சுக்குழல்களுடன் இணைத்து விந்தணுக்களை கடத்த உதவும் இவை சுமார் 30 செ.மீ நீளமுள்ளவை.

இப்பகுதி இரத்தக் குழாய்கள், நரம்புகளை நெருங்கியுள்ளது. இவைகள் அனைத்தும், தசைகளுடன் ஒருங்கிணைந்து இடுப்பு பகுதியினை அடைகின்றன. இத்தொகுப்பிற்கு விந்தகக் கற்றை என்று பெயர். விந்து நாளத்தின் முடிவுப் பகுதி ஆம்புல்லா எனும் அகன்ற பகுதியாகயுள்ளது. இங்குள்ள மென்மைத் தசைகள் சுருங்கி-விரியும் தொடரியக்கம் கொண்டவை. இவ்வியக்கம் விந்து செல்களைக் கடத்த உதவும்.

விந்து தள்ளலின் போது விந்து வெளியேற்றக் குழாய்களின் மென்தசைகள் சுருங்குகின்றன. இதனால் விந்தணு ஆண்குறியை நோக்கி தள்ளப்படுகிறது. விந்தணு வெளியேற்றக் குழாயிலிருந்து சிறுநீர்க் குழாயை அடைகிறது. பிற ஆண் இனப்பெருக்கத் தொகுதி சுரப்பிகளும் இதே நேரத்தில் தள்ளப்படுகின்றன.

கருத்தடையின் ஒரு முறையாக இந்த இரு விந்து நாளங்களும் அறுவை சிகிட்சை மூலம் வெட்டப்பட்டு மூடப்படுகின்றன. இது விந்துக் குழாய் வெட்டு என அறியப்படுகிறது. இதனால் விந்தணு வெளியேற இயலாது. இது பொதுவாக நிலைத்த மாற்றம் எனினும் சில நேரங்களில் இதனை மீளமைக்க முடியும். சில சமயங்களில் அறுவை மருத்துவர் குழாய்களை வெட்டாது விந்தணு வெளியேற்றத்தைத் தடுக்குமாறு தடையொன்றை ஏற்படுத்துவதும் உண்டு.