காம சூத்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காம சூத்திரம் என்பது காமம் தொடர்பான தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் கி. பி. முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் துவக்கத்தில், முதலில் நான்கு புருஷார்த்தங்கள் குறித்தும், பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்நூலிலேயே அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகே காமம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது[1]. எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களையும் பின்னர் இணைத்ததனாலும் இந்நூல் பாலுறவு நிலைகள் பற்றியதாகவே பரவலாக அறியப்படுகிறது. உண்மையில் அது நூலின் ஒரு பகுதியேயாகும். இரண்டாம் அத்தியாயம் மட்டுமே முழுவது பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறுகிறது. காதல், பாலியல் கல்வி முதலிய பிற கருத்துகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
காமசூத்திரம் என்ற நூல் காம சாஸ்திரத்தை சார்த்து எழுதப்பட்ட நூல் ஆகும்[2]. இந்நூலின் படி, காம சாஸ்திரம், முதன் முதலில் சிவனால் நந்தி தேவனுக்கு உபதேசிக்கப்பட்டது, பிறகு நந்தி தேவர் இதை ஒராயிரம் அத்தியாங்களில் எழுதினார். இந்த சாஸ்திரம் பின்னர் பலராலும் சுருக்கி எழுதப்பட்டது. வாத்சாயனர் தான் மூல காம சாஸ்திரத்தின் ஒரு சிறு பகுதியையே விவரிப்பதாக நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன் சுலோகம் வருமாறு[3]
மஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேத்யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச
வரலாற்று ஆசிரியர்கள், காம சூத்திரம் தற்போதைய வடிவில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.[4]
பொருளடக்கம் |
[தொகு] சொற்பிறப்பியல்
காம என்ற சொல்லுக்கு வடமொழியில் ஆசை, விருப்பம் மற்றும் இன்பம் என்று பொருள்[5]காமம் என்பதின் விளக்கம் காம சுத்திரத்தில் இவ்வாறாக குறிப்பிடப்பட்டுள்ளது[6].
"ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்"
"காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும்"
'சூத்திரம் என்பது வடமொழியில் நூலைக்குறிக்கும். எனவே காமத்தை குறித்த நூலுக்கு காமசூத்திரம் என்ற பெயர் வந்தது.
[தொகு] உள்ளடக்கம்
காமசூத்திரத்தில் 36 அத்தியாயங்கள் உள்ளன இவை 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவ்வேழு பகுதிகள் பின்வருமாறு
- சாதாரணம்(முன்னுரை): இதில் தர்மம்,அர்த்தம்,காமம் குறித்த பொதுவான கருத்துக்கள், மற்றும் பாலியல் குறித்த சில கருத்துகளும் உள்ளன
- சாம்பிரயோகிகம்(ஒன்றுசேர்தல்): இப்பகுதியில் வெவேறுவிதமான பாலியல் நிலைகள், பாலியல் செயல்கள் முதலியவற்றை விவரிக்கிறது. முழுக்க முழுக்க பாலியல் தொடர்பான கருத்துகளை விவரிப்பது இப்பகுதி மட்டுமே.
- கன்யாசம்பிரயுக்தகம்(மனைவியை தேர்ந்தெடுத்தல்): வெவேறு விதமான திருமணங்கள், பெண்ணிடம் காதலை தெரிவுக்கும் முறைகள், அவளை மணக்கும் முறைகள், திருமணத்திற்கு பிறகான பாலியல் உறவு ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன
- பார்யாதிகாரம்(மனைவி அதிகாரம்): இப்பகுதி, மனைவியிந் நடத்தை விதிமுறைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பின் மூத்த மனைவி மற்றும் பிற மனைவியரின் செயல்பாடுகள் ஆகியவை உள்ளன
- பாராதாரிகம்(பிறமனைவியர் குறித்து):பிற மனைவியரின் நடத்தை விதிமுறைகள் குறித்த விபரங்கள் உள்ளன.
- வைசிகம்(வேசிகளை குறித்து): காமக்கிழத்தியரின் செயல்பாடுகள், மனைவியாக காமக்கிழத்தியரின் செயல், முன்னால் காதலுருடன் இணையும் வழிகள், முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
- ஔபனிஷாதிகம்(மருத்துவ அதிகாரம்): இதில் உடற்கவர்ச்சியினை கூட்டுவதற்கான மருத்துவ முறைகள், ஆண்மையை மீண்டும் பெரும் வழிகள் போன்றவை உள்ளன
[தொகு] காமமும் ஆன்மீகமும்
பொதுவாக ஆன்மீகம் காமத்தை ஒதுக்கினாலும், பெரும்பாண்மையான பொதுமக்களின் வாழ்க்கையில் காமம் தவிர்க்க முடியாத ஒன்று. இந்து மதத்தில், காமம் வாழ்வில் அடைய நான்கு கருத்துகளுள் காமமும் இணைக்கப்பட்டுள்ளது(நான்கு புருஷார்த்தங்க்கள்:தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்). புருஷார்த்தங்கள் வாழக்கையில் ஒருவர் அடைய வேண்டிய நான்கு குறிக்கோள்கள் ஆகும்.
மக்கள் காமத்தை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பது காம சூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது[7]
ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத
பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்
காமம் ச யௌவனே
ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச
ஒரு மனிதன் இப்புருஷார்த்தங்களை வெவ்வேறுவிதமாக தங்களுடைய வெவ்வேறு காலக்கட்டத்தில் பாவிக்க வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள்
இளைமைப்பருவத்தில் காமம்
முதுமைப்பருவத்தில் தர்மம் மற்றும் மோட்சம்
மேலும் தர்மம் அனைத்தையும் விட சிறந்தது என காம சூத்திரம் விளம்புகிறது
[தொகு] பாலியல் கல்வி
வித்தியாமுத்தேஷம் என்ற அத்தியாயத்தில்,வாத்சாயனார் காம சாஸ்திரத்தை கற்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துக்கூறுகிறார்
காமத்தை குறித்த கல்வியனை மற்ற கல்விகளைப்போல அனைவரும் கற்க வேண்டும் எனக்கூறும் வாத்சாயனர், காம சாஸ்திரம் பெண்களும் கற்க வேண்டுமென வலியுறுத்துகிறார். திருமணமான பின்பும் பெண்கள் தங்கள் கணவனின் அனுமதியுடன் காமக்கல்வி கற்கலாம் எனக்கூறியுள்ளார்.
தர்மார்தாங்கவித்யாகாலான் அனுபரோத்யான் காமசூத்ரம் ததாங்கவித்யாஸ் ச புருஷோ தீயீத
ப்ரக்-யௌவனாத் ஸ்த்ரீ ப்ரத்த ச பத்யுர் அபிப்ராயாத்
மேற்க்குறிப்பிடப்பட்டுள்ள சுலோகங்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன
[தொகு] மொழி பெயர்ப்புகள்
காம சூத்திரத்தின் முதல் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பு ரிச்சர்ட் ஃப்ரான்ஸிஸ் என்பவரால் 1883இல் இயற்றப்பட்டது.
அண்மையில் நிகழ்ந்த மொழி பெயர்ப்புகளில் ஒன்று, இந்திர சின்ஹாவால் 1980இல் வெளியிடப்பட்டது. 1990களில் இந்நூலின் பாலியய் சம்மந்தமாக பகுதிகள் மட்டும் பெருமளவு புழக்கத்தில் இருந்ததால், இன்றும் கூட பலர் அது மட்டுமே காம சூத்திரம் என நம்புகின்றனர்.[8]
ஆலாய் டேனியேலோ என்பவர் முழுமையான காம சூத்திரம் என்று மூல உரையுடன் இணைந்த மொழிபெய்ர்ப்பை 1994இல் வெளியிட்டார்.
2002இல் இப்புத்தகம் வெண்டி டோனிகர் என்ற பேராசிரியராலும் சுதி காகர் என்ற மனோவியல் நிபுணராலும் மனோரீதியான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்க்கப்பட்டது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ காமசூத்திரம் முதல் பகுதி
- ↑ காம சாஸ்திரங்களில் முக்கியமானது காம சூத்திரம் காண்க: Flood (1996), பக்கம். 65.
- ↑ காம சூத்திரம் முதல் அத்தியாயம்.8வது சுலோகம்
- ↑ காம சூத்திரம் இயற்றப்பட்ட காலம், காண்க: Keay, pp. 81, 103.
- ↑ MW சமஸ்கிருத மின் அகராதி
- ↑ காம சூத்திரம். இரண்டாம் அத்தியாயம் 11ஆம் சுலோகம்
- ↑ காம சூத்திரம், முதல் அத்தியாயம், சுலோகம் 2-5
- ↑ Sinha, p. 33.
[தொகு] வெளி இணைப்புகள்
- மின்னூல்கள்
- காம சூத்திரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, pdf வடிவம் (Portable Document File)
- காம சூத்திரம் மூல நூல்

