நாற்பண்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் என்பவை ஆண்,பெண் இருபாலாருக்கும் அவரவர் இயல்புகளுக்கு ஏற்ப இயற்பண்புகளாய் அமைந்திருக்க வேண்டிய பண்புகளாக மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட பண்புகளாகும்.

ஆண்களுக்குரிய நாற்பண்புகள்[தொகு]

பெண்களுக்குரிய நாற்பண்புகள்[தொகு]

கற்புள்ள பெண்களுக்குரியதென மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட அகப்பண்புகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளாகும். முற்போக்குச் சிந்தனைவாதிகளும் பெண்ணிலைச் சிந்தனையாளர்களும் நாற்பண்புகள் குறித்த விபரிப்புகளை அடக்குமுறையின் வடிவம் என மறுதலித்து வருகிறார்கள்.

அச்சம்[தொகு]

வரவிருக்கும் அபாயம் மற்றும் அவப்பெயர் குறித்து ஏற்படும் மன நடுக்கம் எனப் பொருள்படும்.

மடம்[தொகு]

இது மடமை எனவும் கூறப்படும். அறிந்தவொரு விடயத்தைக் கூட அறியாதவர் போல சபையில் எடுத்துக்கூறாதத் தன்மை என இது விளக்கப்படுகிறது.

நாணம்[தொகு]

வெட்கப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும்.

பயிர்ப்பு[தொகு]

கணவன் தவிர்த்த வேற்று ஆண்மகனின் உடல் பரிசம் பட்டதும் ஏற்படும் கூச்ச உணர்வு என இது விளக்கப்படுகிறது. பயிர்ப்பு என்றால் அசுத்தம், குற்சிதம் என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதியிலிருந்து பொருள் கூறப்பட்டுள்ளது. குற்சிதம் என்றால் அசுத்தம் - அருவருப்பு என்று பொருள் மதுரைத் தமிழ்ப் பேரகராதியிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஒரு பெண்ணென்றால் அசுத்தம், அருவருப்பாகப் பார்ப்பதற்கு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே, இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று பெண்ணிய மற்றும் பெரியாரியச் சிந்தைனையாளர்கள் இந்த விளக்கத்தை எதிர்க்கின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாற்பண்புகள்&oldid=1764566" இருந்து மீள்விக்கப்பட்டது