காந்தா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தா சிங் (Ganda Singh) இந்தியாவில் பெரோஸ்பூரைச் சேர்ந்த இவர், கதர் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தார். இவர் சீனாவின் ஆன்கோவில் சிறிது காலம் கழித்தார். அங்கு இவர் 1926 இல் சாங் கை-சேக்கைச் சந்தித்தார். மேலும், எம்.என். ராயை 1927 இல் சந்தித்தார். சான் காய் சேக்கை சந்தித்தபோது, இவர் பிரித்தானிய எதிர்ப்பு உரையை நிகழ்த்தியதாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில் ராயின் சீக்கிய குருத்வாராவுக்கு சென்றபோது நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். இது கதரியக்க நடவடிக்கைக்கான மையமாக அமைந்தது. இவர் அப்போது இந்துஸ்தான் கதர் தண்டோராவின் பணியாளராக இருந்தார் . அக்டோபர் 1927 இல் இவர் நாங்கிங்கிற்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் இந்துஸ்தான் கதர் தண்டோராவின் ஆசிரியராக பணியாற்றினார். மேலும் கிழக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கத்தின் ஒரு கிளையையும் நிர்வகித்தார். 1927 ஆம் ஆண்டில் அர்ஜுன் சிங்கும், உத்தம் சிங் ஆகியோரால் நாங்கிங்கிற்கு இவர் சென்றதுடன், மற்றவர்களும் 1929 இல் இணைந்தனர். அதன்பிறகு, இவர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட கதர் கட்சித் தலைவர்கள் குழுவில் ஒருவரானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தா_சிங்&oldid=3037849" இலிருந்து மீள்விக்கப்பட்டது