கல்யாணி தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாணி தாசு
Kalyani Das
தாசு 1938-ல்
தாய்மொழியில் பெயர்কল্যাণী দাস
பிறப்பு(1907-05-28)மே 28, 1907
கிருஷ்ணாநகர், நதியா, மேற்கு வங்காளம்
இறப்புபெப்ரவரி 16, 1983(1983-02-16) (அகவை 75)
ரிசிகேசு, உத்தரப் பிரதேசம் இந்தியா
அமைப்பு(கள்)யுகாந்தர் & இந்திய தேசிய காங்கிரசு
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

கல்யாணி தாசு (Kalyani Das)(1907-1983) என்பவர் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் புரட்சியாளர் மற்றும் தேசியவாதி ஆவார்.[1][2]

கல்வி[தொகு]

கல்யாணி தாசு கட்டாக்கில் உள்ள ராவன்ஷா கல்லூரிப் பள்ளி மாணவி ஆவார். தாசு தனது இளங்கலை கலைப் பட்டத்தை 1928-ல் முடித்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பு[தொகு]

தாசு கொல்கத்தாவில் உள்ள பெண்களுக்கான புரட்சிகர அமைப்பான சத்ரி சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். 1930-ல், வங்காள ஆளுநருக்கு எதிராகப் பெண் மாணவர்களின் போராட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார். 1932-ல் ஆளுநர் எதிர்ப்பு நடவடிக்கைக்காக இவர் கைது செய்யப்பட்டார். இதே நேரத்தில் இவரது வகுப்பு தோழி கமலா தாசு குப்தா கைது செய்யப்பட்டார்.[2]

இறப்பு[தொகு]

கல்யாணி தாசு பிப்ரவரி 16, 1983-ல் இறந்தார். 

வெளியீடு[தொகு]

கல்யாணி தாசு பெங்கால் ஸ்பீக்ஸ் (1944-ல் வெளியிடப்பட்டது) என்ற புத்தகத்தைத் தொகுத்தார். மேலும் இதைத் தனது சகோதரி பீனா தாஸுக்கு அர்ப்பணித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tri Loknath Chatterjee (2004). জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম. Dhaka: ধ্রুপদ সাহিত্যাঙ্গণ. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:984-8457-00-3. 
  2. 2.0 2.1 Kamala Das Gupta (January 2015). স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯. Kolkata: র‍্যাডিক্যাল ইম্প্রেশন. பக். 125–130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85459-82-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணி_தாசு&oldid=3672657" இலிருந்து மீள்விக்கப்பட்டது