உருசியப் புரட்சி (1917)
| ரஷ்யப் புரட்சி (1917) | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
![]() சிவப்புச் சதுக்கத்தை நோக்கி முன்னேறும் போல்ஷ்விக் படைகள். |
||||||||
|
||||||||
| பிரிவினர் | ||||||||
| வார்ப்புரு:நாட்டுத் தகவல் Russian Empire | ||||||||
| தளபதிகள் | ||||||||
| வார்ப்புரு:நாட்டுத் தகவல் Russian Empire இரண்டாம் நிக்காலஸ் மன்னன் | ||||||||
ரஷ்யப் புரட்சி 1917 என்பது, ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டு மக்கள் புரட்சிக ளையும், அது தொடர்பான நிகழ்வுகளையும் குறிக்கும். இப் புரட்சிகள் ரஷ்யப் பேரரசின் சமூக இயல்புகளை மாற்றியதுடன், ரஷ்ய அரசையும் மாற்றியமைத்தன. சாரிய சர்வாதிகாரம் அகற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. 1917 பெப்ரவரியில் நிகழ்ந்த புரட்சி தன்னிச்சையான மக்கள் புரட்சியாகும். இது பெட்ரோகிராட் நகரை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது. நடந்த குழப்பத்தில், டூமாவின் உறுப்பினர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டு ரஷ்ய இடைக்கால அரசொன்றை அமைத்தனர். ஸாரின் படைத் தலைவர்கள் புரட்சியை அடக்குவதற்கான வழிகள் எதுவும் இல்லையென உணர்ந்து கொண்டனர். கடைசி ஸார் மன்னரான இரண்டாம் நிக்கலாஸ் தனது பதவியைத் துறந்தார். சோவியத்துக்கள் எனப்பட்ட தொழிலாளர் சபைகள், தீவிர சமூகவுடமைப் பிரிவினரால் வழிநடத்தப்பட்டது. இவர்கள் தொடக்கத்தில் புதிய அரசை ஏற்றுக்கொண்டபோதும், அரசில் செல்வாக்குச் செலுத்துவதற்கான சிறப்புரிமைகளைக் கோரிவந்தனர்.
இது இரட்டை அதிகார நிலையை உருவாக்கியது. இடைக்கால அரசு அரச அதிகாரத்தைக் கொண்டிருக்க, தேசிய அளவில் பெரிய வலையமைப்பைக் கொண்டிருந்த சோவியத்துக்கள் பொருளாதார நிலையில் தாழ்ந்த வகுப்பினரதும் இடதுசாரிகளினதும் ஆதரவைப் பெற்று வலுவுடன் இருந்தது. இந்தக் குழப்பமான நிலையில் ரஷ்யா சண்டையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தது. இடைக்கால அரசு போரைத் தொடர விரும்பியது. போல்செவிக்குகளும், இடதுசாரியினரும் போரைக் கைவிட விரும்பினர். போல்செவிக்குகள் தொழிலாளர் படையைச் செங்காவலராக மாற்றி அமைத்தனர்.
