ஆகஸ்டு 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 23 கிரிகோரியன் ஆண்டின் 235வது நாளாகும். நெட்டாண்டுகளில் 236வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 130 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
Events [தொகு]
- 1305 - ஸ்கொட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் வில்லியம் வொலஸ், இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னனால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
- 1541 - பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார்.
- 1555 - நெதர்லாந்தில் கால்வினிஸ்துகளுக்கு முழுமையான உரைமைகள் வழங்கப்பட்டன.
- 1784 - மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை.
- 1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1839 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைக் கைப்பற்றியது.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜெர்மனியுடன் போரை அறிவித்தது.
- 1929 - பாலஸ்தீனத்தில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி அவர்களில் 133 பேரைக் கொன்றனர்.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டனர். பின்லாந்து, உக்ரைன், போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பாடசாலை ஒன்றின் மேல் வீழ்ந்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
- 1948 - ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.
- 1952 - அரபு லீக் அமைக்கப்பட்டது.
- 1966 - லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது.
- 1973 - இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
- 1975 - லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது.
- 1990 - ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.
- 1990 - மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன.
- 2000 - பஹ்ரேய்னில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.
பிறப்புக்கள் [தொகு]
- 1754 - பதினாறாம் லூயி, பிரெஞ்சு மன்னன் (இ. 1793)
- 1868 - அய்யன் காளி, தலித் போராளி (இ. 1941)
- 1914 - டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர்.
- 1919 - சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (இ. 2008)
- 1978 - கோபி பிரயன்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1951 - வ. ரா., தமிழ் எழுத்தாளர் (பி. 1889)
- 1997 - ஜோன் கெண்ட்ரூ, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1961)
- 2000 - ப. ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதி. (பி.1952)
சிறப்பு நாள் [தொகு]
- ருமேனியா - விடுதலை நாள் (1944)
- உக்ரேன் - கொடி நாள்
- அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்