ஆகஸ்டு 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகஸ்டு 9 கிரிகோரியன் ஆண்டின் 221வது நாளாகும். நெட்டாண்டுகளில் 222வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 144 நாட்கள் உள்ளன.
| << | ஆகஸ்ட் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMVIII | ||||||
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1173 - பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.
- 1902 - ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார்.
- 1902 - யாழ்ப்பாணம் தின்னவேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.
- 1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000-90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.
- 1965 - சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.
- 1974 - வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க சனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.
- 1991 - யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
- 2006 - திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1962 - ஹேர்மன் ஹெஸ் (Hermann Hesse), நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய எழுத்தாளர் (பி. 1877)
- 1969 - செசில் பிராங்க் பவெல் (Cecil Frank Powell), நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய பௌதிகவியலாளர் (பி. 1903)
- 1975 - திமீத்ரி ஷொஸ்தகோவிச் (Dmitri Shostakovich), ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1906)
- 2000 - ஜோன் ஹர்சான்யி (John Harsanyi), நோபல் பரிசு பெற்ற ஹங்கேரிய பொருளியலாளர் (பி. 1920)
[தொகு] சிறப்பு நாள்
- சிங்கப்பூர் - விடுதலை நாள் (1965)
- தென்னாபிரிக்கா - தேசிய பெண்கள் நாள்

