உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோதி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோதி
பிறப்புஜோதி
1963
இறப்பு18 மே 2007(2007-05-18) (அகவை 44) [1]
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியாn
பணிநடிகை

ஜோதி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். புதுக்கவிதை, இரயில் பயணங்களில் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.[1][2][3] டி. ராஜேந்தரின் இரயில் பயணங்களில் மற்றும் ரஜினிகாந்த் நடித்த புதுக்கவிதை போன்ற படங்களில் நடித்த ஜோதி நடிப்பில் முத்திரை பதித்தார்.

2007 இல் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மார்பக புற்றுநோயால் ஜோதி இறந்தார். அப்போது ஜோதிக்கு வயது 44 ஆகும். டி ராஜேந்தர் இயக்கிய இவரது முதல் திரைப்படமான "இரயில் பயணங்களில்" படம் வெற்றிப் படமாக ஆனபோது இவர் வெளிச்சத்திற்கு வந்தார். 80 களின் நடுப்பகுதியில் கவிதாலயா தயாரித்த "புதுக்கவிதை" படத்தில் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகருக்கு தமிழ்த் திரைப்பட உலகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

தூர்ப்பு வெல்லே ரெயிலு என்ற படத்தின் வழியாக தெலுங்கு திரையுலகத்திற்கு இவர் அறிமுகமானார்.[சான்று தேவை]

பகுதி திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
1979 தூர்ப்பு வெல்லோ ரெயிலு அலுமேலு தெலுங்கு
1980 வம்ச விருட்சம் தெலுங்கு பிலிம்பேர் சிறந்த நடிகை விருது (தெலுங்கு)
1981 இரயில் பயணங்களில் தமிழ்
1981 கன்னித் தீவு தமிழ்
1982 புதுக்கவிதை உமா தமிழ்
1982 சட்டம் சிரிக்கிறது தமிழ்
1982 நெஞ்சங்கள் தமிழ்
1982 மல்லே பண்டரி சியாமளா தெலுங்கு
1982 கோரிதரிச்ச நாள் மலையாளம்
1982 மரோ மலுப்பு தெலுங்கு
1982 ஆ திவசம் மலையாளம்
1983 அஸ்திரம் ரேகா மலையாளம்
1983 கிராமத்து கிளிகள் தமிழ்
1983 ஈ தேசம்லோ ஒக்க ராஜு தெலுங்கு
1983 ஈ பிள்ளக்கு பிள்ளவுத்தந்தா தெலுங்கு
1984 சுவர்ண கோபுரம மெர்சி மலையாளம்
1984 சங்கரி கிரேசி தமிழ்
1984 முடிவல்ல ஆரம்பம் தமிழ்
1985 இராமன் ஸ்ரீராமன் வித்யா தமிழ்
1985 கலிகாலம் ஆடதி தெலுங்கு
1985 பலே தம்முடு நீலவேணி தெலுங்கு
1985 சிறீ கட்னா லீலலு தெலுங்கு
1987 அக்னி புத்ருடு காயத்திரி தெலுங்கு
1987 ராக லீலா தெலுங்கு
1989 அசோக சக்கரவர்த்தி ருக்மணி தெலுங்கு
1990 சின்ன கோடலு தெலுங்கு
1991 ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேசன் தெலுங்கு
1991 இந்திர பவனம் தெலுங்கு
1991 சூரியா ஐபிஎஸ் பார்வதி தெலுங்கு
1991 நிர்ணயம் நளினி தெலுங்கு
1992 கில்லர் லலிதா தெலுங்கு
1992 தர்ம சேத்திரம் பேனர்ஜியின் சகோதரி தெலுங்கு
1992 கோக்கர் மாமா சூப்பர் அல்லுடு தெலுங்கு
1992 போலிஸ் பிரதர்ஸ் தெலுங்கு
2000 பார்த்தேன் ரசித்தேன் சங்கரின் தாய் தமிழ்
2000 வண்ணத் தமிழ்ப்பாட்டு புவணாவின் தாய் தமிழ்
2001 உள்ளம் கொள்ளை போகுதே ஜோதியின் தாய் தமிழ்
2001 கடல் பூக்கள் பீட்டரின் தாய் தமிழ்
2002 அல்லி அர்ஜுனா கிசோரின் தாய் தமிழ்
2002 ராஜா ராஜாவின் தாய் தமிழ்
2002 ஸ்டைல் விஜியின் தாய் தமிழ்
2003 காலாட்படை பாமா தமிழ்
2003 அன்பு அன்புவின் தாய் தமிழ்

இறப்பு

[தொகு]

மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட இவர், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 18 மே 2007 இரவு, தன் 44 வது வயதில் இறந்தார். விவாகரத்து பெற்ற ஜோதி, தனது மகளுடன் சென்னை புறநகரான நீலகரையில் தங்கியிருந்து இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.[1]

குறிப்புகள்

[தொகு]

 

  1. 1.0 1.1 1.2 "Superstar Rajinikanth's heroine passed away". chennai365.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  2. "Tamil Actress Jothi passes away". news.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  3. "Yesteryear actress dead". indiaglitz.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_(நடிகை)&oldid=4167311" இலிருந்து மீள்விக்கப்பட்டது