ஸ்டைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டைல்
இயக்கம்சிபி சக்ரவர்த்தி
தயாரிப்புகே. திருஞாணம்
கதைபத்மாமகன்
இசைபரணி[1]
நடிப்புராகவா லாரன்ஸ்
ரமணா
காயத்திரி ரகுராம்
ஒளிப்பதிவுதினேஷ்
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்திரு பிலிம்ஸ்
வெளியீடு20 திசம்பர் 2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்டைல் (Style) என்பது 2002 ஆம் ஆண்டய தமிழ் நாடகத் திரைப்படமாகும். சிபி சக்ரவர்த்தி எழுதி இயக்கிய இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் காயத்திரி ரகுராம் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, ரமணா மற்றும் வடிவேலு ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களில். நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை பரணி அமைத்துளார். இப்படமானது 2002 திசம்பரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[2][3]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

ராகவா லாரன்ஸ் அற்புதம் (2002) படத்தை முடித்த பின்னர் ஸ்டைல் படத்தில் ஈடுபட்டார். இவரது அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்கள் விரைவாக வெளியாயின.[4] முன்னதாக அரண்மனைக்காவலன் (1994) படத்திற்கு திரைக்கதை எழுதிய அருள், இப்படத்தின் இயக்குநராக அறிவிக்கப்பட்டார், பத்மாமகன் படத்திற்கான உரையாடலை எழுதினார்.

இசை[தொகு]

  • "காதலித்தால் ஆனந்தம்" - ஹரிஹரன்
  • "காதலித்தால் ஆனந்தம்" - கே.எஸ் சித்ரா
  • "வருகிறாள் என்" - உன்னிகிருஷ்ணன்
  • "பொட்டு எடுத்து" - புஷ்பவனம் குப்புசாமி, ஸ்வர்ணலதா
  • "ஸ்டைல் ஸ்டைல்" - திப்பு
  • "உனக்கு என்ன" - உன்னிகிருஷ்ணன்
  • "கடிதமில்லை" - உன்னிகிருஷ்ணன்

வெளியீடு[தொகு]

இந்த படம் 2002 திசம்பரில் வெளியிடப்பட்டது. பின்னர் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இரண்டு சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்டது, முதலில் சூப்பர் ஸ்டைல் என்றும் பின்னர் ஸ்டைல் 2 என, ராகவா லாரன்சின் அடுத்தடுத்த தெலுங்கு படங்களின் வெற்றியையும் பயன்படுத்தி சந்தைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டது. படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி பின்னர் தனுஷ் மற்றும் அறிமுக நாயகி மம்தா சவேரி ஆகியோருடன் ராகவா என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரிக்க முயன்றார், ஆனால் நிதி சிக்கல்கள் தயாரிப்பை நிறுத்திவிட்டார்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-05-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.rediff.com/movies/2002/apr/29ss.htm
  3. https://www.youtube.com/watch?v=I7W9JNMDnG8
  4. http://www.idlebrain.com/celeb/interview/interview_lawrence.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-11-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-26 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டைல்&oldid=3661001" இருந்து மீள்விக்கப்பட்டது