கோவை செந்தில்
Appearance
கோவை செந்தில் | |
---|---|
பிறப்பு | குமாரசாமி c. 1944 |
இறப்பு | 9 ஆகத்து 2018 (வயது 74) கோயம்புத்தூர், இந்தியா |
பணி | நகைச்சுவை நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1980–2018 |
கோவை செந்தில் (Kovai Senthil) என்று திரைப்படங்களில் அறியப்பட்ட குமாரசாமி, தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகராவார். இவர் பாக்யராஜின் ஒரு கை ஓசை தொடங்கி தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[1][2] இவர் 400 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[3]
தொழில்
[தொகு]கோவை செந்தில் தனது தொழில் வாழ்க்கையில், பாக்யராஜுடன் ஆராரோ ஆரிரரோ மற்றும் அவசர போலீஸ் 100 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.[4] இது நம்ம ஆளு, படையப்பா, அவ்வை சண்முகி, கோவா உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
[தொகு]இந்த பட்டியல் முழுமையடையாது; இதை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவலாம்.
- ஒரு கை ஓசை (1980)
- மௌன கீதங்கள் (1981)
- இது நம்ம ஆளு (1988)
- ௭ன் ரத்தத்தின் ரத்தமே (1989)
- ஆராரோ ஆரிரரோ
- பாலைவன பறவைகள் (1990)
- அவசர போலீஸ் 100
- தாலாட்டு கேக்குதம்மா (1991)
- சின்ன பசங்க நாங்க (1992) வெள்ளைச்சாமியாக
- கோகுலம் ஒளிப்படக்கூடத்துக்கு வரும் வாடிக்கையாளராக
- ராஜகுமாரன் (1994)
- என் ராஜாங்கம்
- என் ஆசை மச்சான்
- மேட்டுப்பட்டி மிராசு
- சத்தியவான்
- நாட்டாமை
- வா மகளே வா
- மணி ரத்னம் நடத்துனராக
- தேவா (1995) கோயில் பூசாரியாக
- மைனர் மாப்பிள்ளை (1996) பேருந்து நடத்துநராக
- அவ்வை சண்முகி (1996)
- மூவேந்தர் (1998) ஜோசியராக
- நட்புக்காக ஐயராக
- உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் வீட்டு உரிமையாளராக
- அண்ணன் (1999) ஐயாக்கண்ணாக
- படையப்பா கிராமத்து மனிதராக
- காதலர் தினம்
- சிம்மாசனம் (2000)
- ஜங்ஷன் (2002) பாமாவின் தந்தையாக
- உன்னை நினைத்து (2002) தயாரிப்பாளரின் பைத்தயக்கார மகனாக
- ஸ்டைல் சாமியாக
- லேசா லேசா (2003)
- ஜூட் (2003) மருத்துவராக
- சூரி (2003) ஐயராக
- ஏய் (2004) ஆச்சாரியாக
- தீயவன் (2008) அறிவின் தந்தை
- பிஞ்சு மனசு (2009) ரிக்சாக்காரர்
- கோவா (2010)
- மின்சாரம் (2011) தமிழ் பேராசரியர்
- பூஜை (2014)
- அதிபர் (2015) தரகராக
- தரிசு நிலம் (2017)
- அன்புடன் அன்பரசி (2016) மீசைக்காரனாக
- அய்யனார் வீதி (2017)
இறப்பு
[தொகு]வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக கோவை செந்தில் 2018 இல் இறந்தார். இவரது மரணத்தின் போது இவருக்கு 74 வயது.[1][2][4][5]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Actor Kovai Senthil passes away in Coimbatore". Times of India. 10 September 2018.
- ↑ 2.0 2.1 "Tamil Actor Kovai Senthil Passes Away in Coimbatore". News18. 10 September 2018.
- ↑ "``400 படம் நடிச்சார்.. ஒரு மகளைக் கட்டிக்கொடுக்க படாதபாடு பட்டார்!" - நடிகர் கோவை செந்தில் யார்?". Vikatan.
- ↑ 4.0 4.1 "Actor Kovai Senthil dies at 74". India Today. 9 September 2018.
- ↑ "Veteran Tamil film actor Kovai Senthil passes away at 74". The New Indian Express.