உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மாமகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மாமகன்
இ.ச.தி.வி (2007) இல் பத்மாமகன் (வலது).
பிறப்புஇந்திய ஒன்றியம், தமிழ்நாடு
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மாலதி

பத்மாமகன் (Padmamagan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் பல்லவன் படத்தில் இயக்குநராக அறிமுகமான பிறகு, அம்முவாகிய நான் மற்றும் நேற்று இன்று உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

தொழில்

[தொகு]

ரூஃபஸ் பார்க்கர் தயாரிப்பில் பத்மாமகன் இயக்க ஒரு வணிகத் திரைப்படத்தைத் தேர்வுசெய்தனர். அதன்படி உருவாக்கபட்ட பல்லவன் (2003) படம் சிறிய விளம்பரத்துடன் வெளியிடப்பட்டது. மேலும் இது வணிக ரீதியாக சிறப்பான வெற்றியைப் பெறவில்லை. பார்க்கருடன், இவரும் அம்முவாகிய நான் (2007) படத்தின் பணியைத் தொடங்கினார், இதில் ஒரு பாலியல் தொழிலாளி இல்லத்தரசியாக மாறும் கதையைச் சொன்னார். பார்த்திபன், பாரதி ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் "எழுத்தாளர்-இயக்குநர் பத்மா மகன் தமிழ்த் திரைப்படத்துறையை எதிர்காலத்தில் நன்கு வளர்க்கும் திரைப்படத்துடன் வந்துள்ளார்" என்று நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.[1] இந்த படம் பின்னர் 2007 ஆம் ஆண்டு கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது நாயகன் (1987) க்குப் பிறகு இதுபோன்ற ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் தமிழ் படமாகும்.[2] படம் வெற்றிகண்டபோதும், பத்மகன் தான் அடுத்து எடுக்க திட்டமிட்ட படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. அக்கதையானது ஏழு வயது குழந்தையின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. தயாரிப்பாளரை ஈர்ப்பதில் ஏற்பட்ட தோல்வியானது, இவரை திரைப்படத் தொழிலை கைவிடச் செய்து. இவரை ஒரு குடிகாரனாகவும் மாற்றியது என்பதை இவரே குறிப்பிட்டார்.[3]

2012 ஆம் ஆண்டில், இவர் தனது மூன்றாவது படமான நேற்று இன்று படத்தில் விமல், பிரசன்னா ரிச்சர்டு ஆகியோரின் நடிப்பில் உருவாக்கினார். இவர் தனது மனைவி மாலதியுடன் சேர்ந்து இந்த படத்தைத் தயாரித்தார், மேலும் இது சமூக ரீதியாக பொருத்தமான திரைப்படமாக இருக்கும் என்று கருதினார். பல தாமதங்களுக்குப் பிறகு இந்த படம் 2014 இல் குறைந்த திரையரங்குகளில் வெளியானது.[4] 2015 ஆம் ஆண்டில், மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கிய பூமி என்ற படத்தின் பணியை இவர் தொடங்கினார்,

திரைப்படவியல்

[தொகு]
இயக்குநர்
ஆண்டு படம் குறிப்புகள்
2003 பல்லவன்
2007 அம்முவாகிய நான்
2014 நேற்று இன்று
எழுத்தாளர்

குறிப்புகள்

[தொகு]

 

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-22. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
  3. http://www.newindianexpress.com/entertainment/tamil/article1524593.ece%3Fservice%3Dprint+&cd=1&hl=en&ct=clnk&gl=uk
  4. "Interesting fusion". Samachar. Archived from the original on 7 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மாமகன்&oldid=4167288" இலிருந்து மீள்விக்கப்பட்டது