ரிச்சர்ட் ரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்ட் ரிசி
பிறப்புரிச்சர்ட் சாராப் பாபு
அக்டோபர் 20, 1977 (1977-10-20) (அகவை 45)
கேரளம், இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990, 2002-தற்போது
வாழ்க்கைத்
துணை
நித்யா
உறவினர்கள்சாலினி (சகோதரி)
சாமிலி (சகோதரி)
அஜித்குமார் (மைத்துனர்)

ரிச்சர்ட் சாராப் பாபு திரைப்படங்களில் ரிச்சர்ட் ரிசி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அதிகமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.[1] இவர், நடிகர் அஜித் குமாரின் மனைவியான சாலினியின் சகோதரர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ரிச்சர்ட், சென்னையில் குடியேறிய மலையாளக் குடும்பத்தில் பாபு, ஏலியஸ் இணையருக்கு 1977 அக்டோபர் 20 அன்று மகனாகப் பிறந்தார். 12ஆம் வகுப்பு வரை, லயோலா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கல்வி பயின்றார்.[2] இவரது இளைய சகோதரிகளான சாலினி, சாமிலி இருவரும் திரைப்பட நடிகைகள் ஆவர். இவரது தந்தை கேரளத்தின் கொல்லம் நகரைச் சேர்ந்தவர். தாயார் சென்னையில் குடியேறிய மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நடிகர் ஆவதற்காக சென்னைக்கு குடிபெயர்ந்தவர். இவர் மற்றும் இவரது சகோதரிகளும் பெரிய நடிகைகளாக திகழ்ந்ததன் மூலமாக, தான் பெரிய நடிகராக வேண்டும் என்கிற இவர்களது தந்தையின் இலட்சியத்தை நிறைவேற்றினர்.[3] அஜித் குமார், இவரது சகோதரி சாலினியின் கணவராவார்.

திரை வாழ்க்கை[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

காதல் வைரஸ் திரௌபதி

பெற்ற விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.jointscene.com/artists/Kollywood/Richard/4328
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-02-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-29 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.mangalam.com/mangalam-varika/143728?page=0,1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_ரிசி&oldid=3569794" இருந்து மீள்விக்கப்பட்டது