பூமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமி
இயக்கம்லட்சுமன்
தயாரிப்புசுஜாதா விஜயகுமார்
கதைலட்சுமன்
இசைடி. இமான்
நடிப்பு
ஒளிப்பதிவுடெட்லி
படத்தொகுப்புஜான் ஆபிரகாம் & ரூபன்
கலையகம்ஹோம் மூவி மேக்கர்ஸ்
யார்கோ என்டேர்டைன்மெண்ட்
விநியோகம்ஹாட் ஸ்டார்
வெளியீடுசனவரி 14, 2021 (2021-01-14)(இந்தியா)
ஓட்டம்2 மணி நேரம் 7 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூமி (Bhoomi) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை லட்சுமன் என்பவர் இயக்க 'சுஜாதா விஜயகுமார்' என்பவர் தயாரிக்க ஜெயம் ரவி, நிதி அகர்வால், ரோனிட் ராய்[1] மற்றும் சதீஸ்[2] ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படம் விவசாயத்தின் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இசை அமைப்பாளர் டி. இமான் என்பவர் இசை அமைத்துள்ளார். மற்றும் இந்தத் திரைப்படம் நடிகர் ஜெயம் ரவியின் 25 வது திரைப்படம் ஆகும்.[3] இந்தத் திரைப்படம் 14 சனவரி 2021 தமிழர் திருநாள் தைப்பொங்கல் அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.[4][5][6]

கதைசுருக்கம்[தொகு]

இந்தத் திரைப்படத்தின் கதை பூமிநாதன் (ஜெயம் ரவி) என்பவர் நாசா நிறுவனத்தில் பணியாற்றி விட்டு விடுமுறைக்காகத் தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கே விவசாயிகள் படும் கஷ்டத்தைப் பார்த்து இங்கேயே தங்கி அவர்களுக்கு உதவி செய்ய முடிவுசெய்கிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொடுத்து இந்தப் பூமியை நாசம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்க்க ஆரம்பிக்கின்றார்.

இதனால் சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதனை முறியடித்து விவசாயிகளையும் விவசாயத்தையும் எப்படி பூமிநாதன் காப்பாற்றுகிறார் என்பது தான் மீதி கதை.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இந்தத் திரைப்படத்தை இயக்குனர் 'லட்சுமணன்' என்பவர் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து ரோமியோ ஜூலியட் (2015), போகன் (2017) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[7] மற்றும் இது நடிகர் ஜெயம் ரவியின் 25 வது படம் ஆகும். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை 'நிதி அகர்வால்' என்பவர் நடித்துள்ளார் மற்றும் நடிகர் 'ரோனிட் ராய்'க்கான முதல் கோலிவுட் திரைப்படம் ஆகும்.[8]

ஒலிப்பதிவு[தொகு]

இந்தத் திரைப்படத்திற்கு டி. இமான் என்பவர் இசை அமைத்துள்ளார். மற்றும் இந்தப் பாடல்கள் 'சோனி மியூசிக் இந்தியா'வில் வெளியிடப்பட்டது.

பூமி
ஒலிப்பதிவு
வெளியீடு2020
ஒலிப்பதிவு2020
இடம்சென்னை
ஸ்டுடியோடி.இம்மனின் ஒலி தொழிற்சாலை
இசைப் பாணிஒலிப்பதிவு
நீளம்20:58
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்டி. இமான்
டி. இமான் காலவரிசை
காடன்
(2019)
பூமி
(2020)
அண்ணாத்த
(2020)
Track list
# பாடல்Singer(s) நீளம்
1. "தமிழன் என்று சொல்லடா"  டி. இமான், அனிருத் ரவிச்சந்திரன், லாவண்யா சுந்தரராமன் 4:25
2. "கடை கண்ணாலே"  சிரேயா கோசல், வருண் பரந்தாமன் 4:35
3. "உழவா"  யோகி, சித் ஸ்ரீராம் 4:23
4. "வந்தே மாதரம்"  சபேஷ் மன்மதன், அனன்யா பாட் 3:58
மொத்த நீளம்:
20:58

வெளியீடு[தொகு]

இந்தத் திரைப்படம் 1 மே 2020 அன்று வெளியிடத் திட்டம் இடப்பட்டது ஆனால் இந்தியாவில் 2020 கொரோனாவைரசுத் தொற்று நோய் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.[9] கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக திரையரங்குகளில் வெளியீடு நிறுத்தப்பட்டது மற்றும் அதன் நேரடி வெளியீடு ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்பட்டது.[10] பின்னர் 14 சனவரி 2021 தமிழர் திருநாள் தைப்பொங்கல் அன்று டிஸ்னி + ஹாட் ஸ்டார் என்ற ஓடிடி தளத்தில் வெளியானது.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. Weinstain, Roy; Segal, Ehud; Satchi-Fainaro, Ronit; Shabat, Doron (2010). "Real-time monitoring of drug release". Chem. Commun. 46 (4): 553–555. doi:10.1039/b919329d. பன்னாட்டுத் தர தொடர் எண்:1359-7345. http://dx.doi.org/10.1039/b919329d. 
 2. "Bhoomi first-look poster out: Jayam Ravi turns farmer for Lakshman’s film". 1 November 2019 இம் மூலத்தில் இருந்து 9 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210109171050/https://www.cinemaexpress.com/stories/news/2019/nov/01/bhoomi-first-look-poster-out-jayam-ravi-is-a-farmer-in-lakshmans-film-15254.html. 
 3. "Watch: Trailer of Jayam Ravi’s ‘Bhoomi’ out". 26 December 2020 இம் மூலத்தில் இருந்து 9 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210109114558/https://www.thenewsminute.com/article/watch-trailer-jayam-ravi-s-bhoomi-out-140338. 
 4. "Jayam Ravi-starrer Bhoomi to release on Disney Plus Hotstar". 24 December 2020 இம் மூலத்தில் இருந்து 9 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210109005936/https://indianexpress.com/article/entertainment/tamil/jayam-ravi-starrer-bhoomi-to-release-on-disney-plus-hotstar-7116478/. 
 5. "Jayam Ravi’s 'Bhoomi' to premiere for Pongal 2021". 13 November 2020 இம் மூலத்தில் இருந்து 19 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201119165220/https://www.thenewsminute.com/article/jayam-ravi-s-bhoomi-premiere-pongal-2021-137566. 
 6. "பொங்கலன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!" (in ta). 7 January 2021 இம் மூலத்தில் இருந்து 9 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210109210721/https://www.dinamani.com/specialstories/2021/jan/07/tamil-movies-to-be-released-on-pongal-3539418.html. 
 7. "Bhoomi trailer: Jayam Ravi starrer social thriller looks compelling" (in en). 27 December 2020 இம் மூலத்தில் இருந்து 9 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210109052919/https://indianexpress.com/article/entertainment/tamil/bhoomi-trailer-jayam-ravi-starrer-social-thriller-looks-compelling-7120930/. 
 8. Varma, Lipika (10 June 2020). "Ronit Roy loves grey characters". டெக்கன் ஹெரால்டு. https://www.deccanchronicle.com/entertainment/bollywood/100620/ronit-roy-loves-grey-characters.html. 
 9. "Jayam Ravi's 25th film 'Bhoomi' to release on May 1". 13 March 2020 இம் மூலத்தில் இருந்து 9 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210109212444/https://www.thenewsminute.com/article/jayam-ravis-25th-film-bhoomi-release-may-1-120115. 
 10. "Jayam Ravi’s 25th film Bhoomi likely to release directly on OTT: report". 29 September 2020 இம் மூலத்தில் இருந்து 9 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210109112041/https://www.hindustantimes.com/regional-movies/jayam-ravi-s-25th-film-bhoomi-likely-to-release-directly-on-ott-report/story-QKHDMDzTVtklDa4P92K7WP.html. 
 11. "பூமி". தினமலர். https://m.dinamalar.com/vimar-detail.php?id=2990. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமி_(திரைப்படம்)&oldid=3743991" இருந்து மீள்விக்கப்பட்டது