நிதி அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிதி அகர்வால்
Nidhhi Agerwal graces the Filmfare Glamour and Style Awards 2017 (26) (cropped).jpg
பிறப்புஐதராபாத்து, தெலங்காணா
கல்விகிறிஸ்து பல்கலைக்கழகம்
பணிநடிகை

நிதி அகர்வால் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அகர்வால் ஐதராபாத்தில் இந்தி பேசும் மார்வாரி குடும்பத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தார். இவர் தனது பள்ளி கல்வியை வித்யாஷில்ப் அகாடமி மற்றும் வித்யா நிகேதன் பள்ளியில் பயின்றார். பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார்.[1][2] இவர் பாலே, கதக் மற்றும் இடை ஆட்டம் ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றுள்ளார்.[3]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

2017 ஆம் ஆண்டு 'முன்னா மைகேல்' என்ற இந்தி மொழித் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.[4][5] இந்த திரைப்படத்தை 'சபீர் கான்' என்பவர் இயக்க, டைகர் ஷெராப், நவாசுதீன் சித்திகி ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்காக 300 வேட்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.[6][7] அதை தொடர்ந்து 2018 இல் 'சவ்யசாசி' என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் மாதவன் உடன் இணைத்து நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் 'மிஸ்டர். மஜ்னு' மற்றும் 'ஐ ஸ்மார்ட் சங்கர்' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் நடிகர் ஜெயம் ரவி நடித்த பூமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து ஈஸ்வரன் என்ற திருப்பப்படத்திலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு (கள்) மொழி (கள்) மேற்கோள்கள்
2017 முன்னா மைகேல் டோலி / தீபிகா சர்மா இந்தி [8]
2018 சவ்யசாசி சித்ரா தெலுங்கு [9]
2019 மிஸ்டர். மஜ்னு நிகிதா "நிக்கி"
ஐ ஸ்மார்ட் சங்கர் டாக்டர். சாரா [10][11]
2021 பூமி சக்தி தமிழ் [12][13] [14]
ஈஸ்வரன் பூங்கொடி [15] [16]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Nidhhi Agerwal". மூல முகவரியிலிருந்து 6 June 2017 அன்று பரணிடப்பட்டது.
 2. "Tiger Shroff to romance Nidhhi Agerwal in Munna Michael". Indiatimes. 21 August 2016. http://beautypageants.indiatimes.com/Tiger-Shroff-to-romance-Nidhhi-Agerwal-in-Munna-Michael/eventshow/53797004.cms. 
 3. "I always wanted to be an actor - Nidhhi Agerwal". Indiatimes. 22 October 2016. http://beautypageants.indiatimes.com/I-always-wanted-to-be-an-actor-Nidhhi-Agerwal/I-always-wanted-to-be-an-actor-Nidhhi-Agerwal/eventshow/54998665.cms. 
 4. "Confirmed! Tiger Shroff to romance Nidhhi Agerwal in are Munna Michael". தி டெக்கன் குரோனிக்கள். 15 August 2016. http://www.deccanchronicle.com/entertainment/bollywood/150816/tiger-shroffs-heroine-for-munna-michael-has-been-confirmed.html. 
 5. "Munna Michael starring Tiger Shroff, Nawazuddin Siddiqui to release on 21 July". Firstpost. 21 April 2017. http://www.firstpost.com/entertainment/munna-michael-starring-tiger-shroff-nawazuddin-siddiqui-to-release-on-21-july-3396758.html. 
 6. "Tiger Shroff's Munna Michael Co-Star Niddhi Agerwal Made To Sign No Dating Clause!". என்டிடிவி. 6 October 2016. http://movies.ndtv.com/bollywood/tiger-shroffs-munna-michael-co-star-niddhi-agerwal-made-to-sign-no-dating-clause-1470855. 
 7. "Actress Nidhhi Agerwal okay with no mating clause". Indiatimes. 29 January 2017. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Actress-Nidhhi-Agerwal-okay-with-no-dating-clause/articleshow/54733603.cms. 
 8. "Nidhhi Agerwal passed four rounds of audition to bag 'Munna Michael'." (15 July 2017). மூல முகவரியிலிருந்து 22 July 2017 அன்று பரணிடப்பட்டது.
 9. "Nidhhi Agerwal's role in 'Savyasachi' is far from glamorous." (24 November 2017). மூல முகவரியிலிருந்து 13 December 2017 அன்று பரணிடப்பட்டது.
 10. "Nidhhi Agerwal confirmed to romance Ram in 'iSmart Shankar'." (28 January 2018). மூல முகவரியிலிருந்து 4 February 2019 அன்று பரணிடப்பட்டது.
 11. "Nidhhi Agerwal to play a scientist in Puri Jagannadh's next." (5 March 2018).
 12. "Nidhhi Agerwal to be paired opposite Jayam Ravi." (22 May 2019). மூல முகவரியிலிருந்து 26 May 2019 அன்று பரணிடப்பட்டது.
 13. "Nidhhi to make K'wood debut with #JR25." (23 May 2019). மூல முகவரியிலிருந்து 27 May 2019 அன்று பரணிடப்பட்டது.
 14. "Jayam Ravi's 'Bhoomi' to premiere for Pongal 2021" (in en). The News Minute. 13 November 2020. https://www.thenewsminute.com/article/jayam-ravi-s-bhoomi-premiere-pongal-2021-137566%3famp. [தொடர்பிழந்த இணைப்பு]
 15. "STR's next with Susienthiran titled Eeswaran; first look out - Times of India" (in en). The Times of India. 26 October 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/strs-next-with-susienthiran-titled-eeswaran-first-look-out/articleshow/78868428.cms. 
 16. "Silambarasan confirms completing Eeswaran shoot" (in en). The Times of India. 6 November 2020. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/silambarasan-confirms-completing-eeswaran-shoot/amp_articleshow/79083857.cms. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதி_அகர்வால்&oldid=3316059" இருந்து மீள்விக்கப்பட்டது