நவாசுதீன் சித்திகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவாசுதீன் சித்திகி
பிறப்பு19 மே 1974 (1974-05-19) (அகவை 49)
புதனா, முசாபர்நகர், உத்திர பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய நாடகப்பள்ளி
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஆலியா சித்திகி
பிள்ளைகள்2

நவாசுதீன் சித்திகி ( [nəˈwaːzʊdːiːn sɪdːiːki] ; பிறப்பு 1197 ஆம் ஆண்டு மே 19) ஓர் இந்திய நடிகர். இவர் இந்தி சினிமாவில் தனது நடிப்பினால் பெயர் பெற்றவர்.[1] இவர் தேசிய நாடகப் பள்ளியின் பழைய மாணவர். சித்திகி இயக்குனர் பிரசாந்த் பார்கவா இயக்கிய படாங் (2012) என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.[2][2]

இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு சினிமா விமர்சகர் ரோஜர் எபெர்ட் என்பவரால் பாராட்டப்பட்டார். இவர் பிளாக் வெவெள்ளி (2007), கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர் (2012) மற்றும் ராமன் ராகவ் 2.0 ஆகியவற்றில் இயக்குனர் அனுராக் காஷ்யப் உடன் இணைந்து பணியாற்றியதற்காக சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சித்திகி 1974 ஆம் ஆண்டு மே 19 அன்று இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான புதனாவில் பிறந்தார். இவரது குடும்பம் லம்பர்தார்களின் ஜமீன்தாரி முஸ்லிம் ஆகும். இவர் தன்னுடன் பிறந்த எட்டு உடன்பிறப்புகளில் மூத்தவர். இவர் தனது இளமைக்காலத்தை உத்தரகண்டில் கழித்தார் [3][4] .

அரித்துவாரில் உள்ள குருகுல் காங்ரி விஸ்வவித்யாலயாவில் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, புதிய வேலையைத் தேடி டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு வதோதராவில் ஒரு வருடம் வேதியியலாளராகப் பணியாற்றினார். டெல்லியில் ஒருமுறை, ஒரு நாடகத்தைப் பார்த்தபின் உடனடியாக நடிப்பில் ஆர்வமடைந்தார். புதுடெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேறுவதற்கு [3] முயற்சித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சித்திகி தனது தம்பி ஷாமாஸ் நவாப் சித்திகி உடன் மும்பையில் வசித்து வருகிறார். நவாசுதீன் ஆலியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷோரா என்ற மகள் மற்றும் யானி என்ற மகனும் உள்ளனர். யானி நவாசுதீனின் 41 வது பிறந்தநாளில் பிறந்தார்.[5] 2020 ஆம் ஆண்டு மே 19 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், ஆலியா தங்களுடைய 11 வருட திருமண வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர விவாகரத்து கோரி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதாகவும் தனது உண்மையான பெயர் அஞ்சனா கிஷோர் பாண்டே என்றும் அதனை ஆலியா என்று மாற்றியமைத்ததாகவும் கூறினார்.

திரைப்பட படப்பிடிப்புகளில் மிகவும் பரப்பரப்பாக இருந்தபோதிலும், சித்திகி தனது சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் விவசாயத்தில் புதிய நுட்பங்கள் மற்றும் அவை விவசாயத்தில் எவ்வாறு சிறப்பாக உதவ முடியும் என்பதைப் பற்றி விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். புதனாவில் புதிய நீர்ப்பாசன நுட்பங்களையும் இவர் செயல்படுத்தினார். அது அங்குள்ள விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது.[6]

குறிப்புகள்[தொகு]

  1. PTI (24 April 2017) Watch: Nawazuddin Siddiqui Explains That He Isn't Just A Muslim, But A Bit Of All Religions Huffingtonpost. Retrieved on 24 April 2017.
  2. 2.0 2.1 "Patang' soars high". 25 August 2012. https://www.thehindu.com/features/cinema/patang-soars-high/article3820477.ece. 
  3. 3.0 3.1 "Acting in Town Hall, star gazing in Maldevta: What makes Doon so special for Nawazuddin Siddiqui? - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-08-04.
  4. MumbaiJune 22, IANS; June 22, 2013UPDATED:; Ist, 2013 10:31. "Actor Nawazuddin's family caught in Uttarakhand weather havoc". India Today (in ஆங்கிலம்). Retrieved 2020-08-04.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  5. "Nawazuddin Siddiqui blessed with baby boy on his 41st birthday". 19 May 2015. Retrieved 22 June 2017.
  6. "Nawazuddin To Buy A Plot In Maharashtra For Farming, Aims To Educate Farmers On New Techniques". indiatimes.com (in ஆங்கிலம்). 2018-08-06. Retrieved 2019-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாசுதீன்_சித்திகி&oldid=3505975" இலிருந்து மீள்விக்கப்பட்டது