ஈஸ்வரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈஸ்வரன்
இயக்கம்சுசீந்திரன்
தயாரிப்புபாலாஜி காபா
கே. வி. துரை
எம். டி. சர்புதீன்
கதைசுசீந்திரன்
இசைதமன்[1]
நடிப்புசிலம்பரசன்
பாரதிராஜா
நிதி அகர்வால்
நந்திதா
ஒளிப்பதிவுதிருநாவுக்கரசு
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்மாதவ் மீடியா
டி கம்பெனி
விநியோகம்7 ஜி பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 14, 2021 (2021-01-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஈஸ்வரன் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை சுசீந்திரன் எழுதி இயக்க, பாலாஜி காபா, கே. வி. துரை மற்றும் எம். டி. சராபுதீன் ஆகியோர் மாதவ் மீடியா மற்றும் டி கம்பெனி என்ற பெயரிலான அவர்களின் நிறுவனப் பெயரில் தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால் மற்றும் நந்திதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை திருநாவுக்கரசுவும் படத்தொகுப்பினை ஆண்டனியும் செய்துள்ளனர். [2] இந்த திரைப்படம் 14 ஜனவரி 2021 தமிழர் திருநாள் தைப்பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியானது.[3][4]

கதைசுருக்கம்[தொகு]

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தனியாக வசிக்கும் பெரியசாமி (பாரதிராஜா) அவருக்கு உதவியாக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கும் ஆதிசிவம் (சிலம்பரசன்). பல வருடங்களாக ஊர் பக்கமே வராத தனது பிள்ளைகளை அவரது மனைவியின் 25வது நினைவு நாளுக்காவது வருவார்களா என காத்திருக்கிறார். அந்த தருணம் கொரோனா நோய் உலகம் முழுவதும் பரவ அதை காரணம் காட்டி பிள்ளைகள் எல்லோரும் ஊருக்கு வருகின்றனர். இந்த குடும்பத்தை பழி வாங்க காத்திருக்கும் சிலர். அதிலிருந்து வரும் பிரச்சனைகளும் அந்தப் பிரச்னைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஆதிசிவம் எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்வரன்_(திரைப்படம்)&oldid=3325123" இருந்து மீள்விக்கப்பட்டது