தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56: வரிசை 56:


==கூட்டணிகள்==
==கூட்டணிகள்==
இத்தேர்தலில் நான்கு முனை போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டது. சுப்ரமணியன் சாமியின் [[ஜனதா கட்சி]] டாக்டர் [[க. கிருஷ்ணசாமி|கிருஷ்ணசாமியின்]] [[புதிய தமிழகம் கட்சி]]யுடன் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.<ref name="hindu3">{{cite news | last= Vimalkumar| first=R.| title= It remains backward despite having scope | date= 19 April 2006 | url =http://www.hindu.com/2006/04/19/stories/2006041906110300.htm| work =[[The Hindu]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai">{{Cite book| last =Palanithurai| first = Ganapathy | title =Perception of grass root democracy and political performance| year = 1998| pages =169–180| id= ISBN 8175330686, ISBN 9788175330689| publisher = M.D. Publications | url =http://books.google.com/books?id=Gm9p_VPDZCgC&pg=PA160}}</ref><ref name="tehelka">{{cite news | last= Vinoj Kumar| first= P. C| title= Will Wit’s Warhorse Win ?| date= 18 January 2010 | url =http://www.tehelka.com/story_main17.asp?filename=Ne041506up_close.asp| work =[[Tehelka]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="businessline2">{{cite news | last= Dorairaj| first= S| title= Can PMK convert support base into votes in TN? | date=7 April 2009 | url =http://www.blonnet.com/2009/04/07/stories/2009040750080400.htm| work =[[Business Line]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="fontline3">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Messages from the States | date= 21 March 1998 | url =http://www.hinduonnet.com/fline/fl1506/15060370.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref>

==தேர்தல் முடிவுகள்==
==தேர்தல் முடிவுகள்==
தேர்தல் தேதி: மே 2, 1996; முடிவுகள் அறிவிப்பு மே 12. மொத்தம் 66.95 % பதிவாகின.<ref name = '''results'''>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf Tamil Nadu Election Results, Election Commission of India] ''accessed'' April 19, 2009</ref>
தேர்தல் தேதி: மே 2, 1996; முடிவுகள் அறிவிப்பு மே 12. மொத்தம் 66.95 % பதிவாகின.<ref name = '''results'''>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf Tamil Nadu Election Results, Election Commission of India] ''accessed'' April 19, 2009</ref>

05:49, 31 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996

← 1991 ஜுன் 24, 1996 2001 →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
  First party Second party
  படிமம்:ஜெயலலிதா.jpg
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா
கட்சி திமுக அதிமுக
கூட்டணி திமுக [[அதிமுக|]]
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சேப்பாக்கம் பர்கூர் (தோல்வி)
வென்ற
தொகுதிகள்
221 8
மாற்றம் +219 -216
மொத்த வாக்குகள் 11,423,380 5,831,383
விழுக்காடு 53.49% 27.08%
மாற்றம் +23.44% -32.50%

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

ஜெ. ஜெயலலிதா
அதிமுக

தமிழ்நாட்டு முதல்வர்

மு. கருணாநிதி
திமுக



தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

தொகுதிகள்

1996 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]

அரசியல் நிலவரம்

1991 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்- இந்திரா காங்கிரசு கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அதிமுகவின் ஜெயலலிதா முதல்வரானார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திற்குள் அதிமுக-காங்கிரசு உறவில் விரிசல் விழுந்தது. இந்திரா காங்கிரசு சட்ட மன்றத்தில் எதிர்க் கட்சியாக செயல்பட்டது. இரண்டே இடங்களில் மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான வை. கோபால்சாமி (வைகோ) கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியெறினார். அவ்வாண்டே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) என்ற புதுக் கட்சியை தொடங்கினார்.[2][3][4][5][6]

அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செலவாக்கிழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வாதிகாரப் போக்கில் செயல் படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின. தெர்தல் நெருங்கும் வரை எதிர்க் கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப் பட்ட பின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் இந்தியப் பிரதமருமான நரசிம்ம ராவ் அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவு பட்டு ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரசு (தமாக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.[7][8]

திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன், வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரசு, மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கி இருந்த்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது. பின்னர், பத்திரிக்கையாளர் சோ ராமசாமியின் முயற்சியால், திமுக – தமாக கூட்டணி அமைந்தது. நடிகர் ரஜினிகாந்த் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சன் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்தார். மேலும் இக்கூட்டணிக்கு ஆதரவாக அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்தனர்.[9][10]

கூட்டணிகள்

இத்தேர்தலில் நான்கு முனை போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டது. சுப்ரமணியன் சாமியின் ஜனதா கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியுடன் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.[11][8][12][13][14]

தேர்தல் முடிவுகள்

தேர்தல் தேதி: மே 2, 1996; முடிவுகள் அறிவிப்பு மே 12. மொத்தம் 66.95 % பதிவாகின.[15]

DMK+ SEATS ADMK+ SEATS OTHERS SEATS
DMK 173 ADMK 4 PMK 4
TMC 39 INC 0 MDMK 0
CPI 8 JD 1
CPM 1
JP 1
BJP 1
IND 1
FBL 1
TOTAL (1996) 220 TOTAL (1996) 4 TOTAL (1996) 10
TOTAL (1991) 4 TOTAL (1991) 224 TOTAL (1991) 9

ஆட்சி அமைப்பு

திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

மேற்கோள்கள்

  1. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009.
  2. Bhagat, Rasheeda (4 April 2001). "Advantage Jayalalitha?". Business Line. http://www.thehindubusinessline.com/2001/04/04/stories/040455ju.htm. பார்த்த நாள்: 2010-01-18. 
  3. Panneerselvan, A. S. (28 May 2001). "JJ & Her Technicolor Cape". Outlook. http://www.outlookindia.com/article.aspx?211761. பார்த்த நாள்: 2010-01-18. 
  4. Ram, Arun. (25 June 2001). "Fostering Ill-will". India Today. http://www.india-today.com/itoday/20010625/state-tn.shtml. பார்த்த நாள்: 2010-01-18. 
  5. Subramanian, T. S. (14 August 1999). "Hurdles in Tamil Nadu". Frontline. http://www.hinduonnet.com/fline/fl1819/18191180.htm. பார்த்த நாள்: 2010-01-18. 
  6. Menon, Jaya (17 March 2007). "Vaiko’s MDMK formally snaps ties with UPA". Indian Express. http://www.indianexpress.com/news/vaikos-mdmk-formally-snaps-ties-with-upa/25881/. பார்த்த நாள்: 2010-01-18. 
  7. Subramanian, T. S. (15 September 2001). "Crusading Congressman". Frontline. http://www.hindu.com/fline/fl1617/16170180.htm. பார்த்த நாள்: 2010-01-18. 
  8. 8.0 8.1 Palanithurai, Ganapathy (1998). Perception of grass root democracy and political performance. M.D. Publications. pp. 169–180. ISBN 8175330686, ISBN 9788175330689.
  9. ""Nenjukku Neethi" resumes". The Hindu. 5 May 2008. http://www.hindu.com/2008/05/05/stories/2008050560331000.htm. பார்த்த நாள்: 2010-01-21. 
  10. Anand, S. (15 April 2002). "A Dash Of Saffron In His Broth". Outlook. http://www.outlookindia.com/article.aspx?215225. பார்த்த நாள்: 2010-01-18. 
  11. Vimalkumar, R. (19 April 2006). "It remains backward despite having scope". The Hindu. http://www.hindu.com/2006/04/19/stories/2006041906110300.htm. பார்த்த நாள்: 2010-01-18. 
  12. Vinoj Kumar, P. C (18 January 2010). "Will Wit’s Warhorse Win ?". Tehelka. http://www.tehelka.com/story_main17.asp?filename=Ne041506up_close.asp. பார்த்த நாள்: 2010-01-18. 
  13. Dorairaj, S (7 April 2009). "Can PMK convert support base into votes in TN?". Business Line. http://www.blonnet.com/2009/04/07/stories/2009040750080400.htm. பார்த்த நாள்: 2010-01-18. 
  14. Subramanian, T. S. (21 March 1998). "Messages from the States". Frontline. http://www.hinduonnet.com/fline/fl1506/15060370.htm. பார்த்த நாள்: 2010-01-18. 
  15. Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009