அரூர்
அரூர் அரியூர் | |
ஆள்கூறு | 12°04′N 78°30′E / 12.07°N 78.5°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
வட்டம் | அரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கி.சாந்தி, இ. ஆ. ப |
சட்டமன்றத் தொகுதி | அரூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
25,469 (2011[update]) • 1,727/km2 (4,473/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
14.75 சதுர கிலோமீட்டர்கள் (5.70 sq mi) • 350 மீட்டர்கள் (1,150 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/harur |
அரூர் (ஆங்கிலம்:Harur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். அரூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
வரலாறு
[தொகு]அரூரின் பழைய பெயர் அரியூர் என்பதாகும். கல்வெட்டுகளும் இந்த ஊரை 'அரியூர்' என்றே குறிப்பிடுகின்றன. 'அரூர்' என்பது அதன் திரிபு.[3][4] இந்த ஊரை, கிராம மக்களில் பலர் இன்னமும் அதன் பழைய பெயரான அரியூர் என்றே குறிப்பிடுகின்றனர். பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2024 யூலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.[5] அரூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]அரூர் நகராட்சியிலிருந்து, தருமபுரி 40 கி.மீ. (வழி: மொரப்பூர், ஒடசல்பட்டி). மாரண்டஹள்ளி 66 கி.மீ. (வழி: மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், வெள்ளிசந்தை) தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 13 கி.மீ. தொலைவில் உள்ள மொரப்பூர் ஆகும்.
நகராட்சியின் அமைப்பு
[தொகு]14.75 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட நகராட்சி அரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 12°04′N 78°30′E / 12.07°N 78.5°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 350 மீட்டர் (1148 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 6,607 வீடுகளில் 25,469 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 12,543 ஆண்கள், 12,926 பெண்கள் ஆவர். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது ஆகும். அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57
- ↑ தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78
- ↑ தினமலர். "நகராட்சியாக தரம் உயர்ந்த அரூர் டவுன் பஞ்., : பொதுமக்கள் வரவேற்பு".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ அரூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Harur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Harur Population Census 2011