உள்ளடக்கத்துக்குச் செல்

விளையனூர் இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளையனூர் சுப்ரமணியன் இராமச்சந்திரன்
Vilayanur S. Ramachandran
2011 டைம் 100 நிகழ்ச்சியில் இராமச்சந்திரன்
பிறப்பு1951
தமிழ்நாடு, இந்தியா
வாழிடம்சான் டியேகோ
துறைநரம்பியல், உளவியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ) (பேராசிரியர்), Center for Brain and Cognition (பணிப்பாளர்)
கல்வி கற்ற இடங்கள்ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை; கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வு நெறியாளர்sஒலிவர் பிராடிக், டேவிட் வித்தெரிட்ச்சு
அறியப்படுவதுநரம்பியல், visual perception, phantom limbs, synesthesia, மதியிறுக்கம், body integrity identity disorder
விருதுகள்Ariens Kappers Medal from the Royal Netherlands Academy of Sciences; பத்ம பூசண், BBC Reith Lectures (2003); visiting fellowship at All Souls College, ஆக்சுபோர்டு (1998)

வி. சு. இராமச்சந்திரன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் விளையனூர் சுப்ரமணியன் இராமச்சந்திரன் (பிறப்பு: 1951) ஒரு புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

இளமையும், கல்வியும்[தொகு]

வி.சு.இராமச்சந்திரன் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியர்களில் ஒருவரான அல்லாடி கிருட்டிணசாமியின் பெயரன் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்த இவர் சென்னையிலும் பாங்காக்கிலும் இவர் பள்ளிக்கல்வியைப் பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். கேம்பிரிச்சில் திரினிட்டிக் கல்லூரியில் ஆய்வுப் பட்டம் பெற்றார். எப்.ஆர்.சி.பி லண்டன் பட்டமும் பெற்றார்.

ஆய்வும் அருஞ்செயலும்[தொகு]

மூளையின் வியக்கத்தக்க செயல்பாடுகளையும் நடத்தை நரம்பியல், உளவியல் சார்ந்த தெரியியல் ஆகியன பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.பார்வை உணர்வு, ஆட்டிசம் பொய்த்தோற்ற உறுப்புகள் ஆகியன பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பல் வேறு ஊடகங்களிலும் அவருடைய சாதனைகள் விளக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஆத்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள கல்வி நிலையங்களிலும் ஆய்வு நிறுவனங்களிலும் தம் ஆய்வுகள் தொடர்பான சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

நூல்கள்[தொகு]

பாராட்டுகள்,விருதுகள்[தொகு]

  • டைம் இதழ் நூறு செல்வாக்குள்ள அறிஞர்களில் வி.சு.இராமச்சந்திரனும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது.
  • ராயல் நெதர்லாண்ட்ஸ் அகாதமி இவருக்கு ஏரியன்ஸ் கேப்பர்ஸ் பதக்கம் வழங்கியது.
  • பீ பீ சீ சார்பில் ரீத் பேருரை விருது வழங்கப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டில் என்றி டேல் பதக்கம் இவருக்கு அளிக்கப்பட்டது.
  • 2007ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மபூசன் விருது வழங்கி இவரைக் கொண்டாடியது.
  • 2010 இல் தில்லியில் சவகர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
  • ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் அமெரிக்கன் நரம்பியல் துறைக் கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இவருக்கு விருதுகள் அளித்துக் கௌரவித்தன.
  • ஆக்சுபோர்டு அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் இவரை நரம்பியல் துறையின் மார்க்கோ போலோ என்று போற்றிப் புகழ்ந்துள்ளார்.

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]