உருவாகும் உள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருவாகும் உள்ளம்
The Emerging Mind: The Reith Lectures 2003
நூலாசிரியர்விளையனூர் இராமச்சந்திரன்
மொழிஆங்கிலம் (மொழிபெயர்ப்பு:ஆங்கிலம்-தமிழ்: உருவாகும் உள்ளம்; ஆசிரியர்:ஆயிஷா நடராஜன்)
வகைஉளவியல்
வெளியீட்டாளர்புரொபைல் புக்சு
வெளியிடப்பட்ட நாள்
2003
ISBN1861973039, 9781861973030

உருவாகும் உள்ளம் (The Emerging Mind)[1] என்பது என்பது 2003 ஆண்டு வெளிவந்த புகழ்பெற்ற அறிவியல் நூலாகும். மூளையின் மாயாஜாலங்கள் என்ற நூலின் மூலம் மிகப் புகழ்பெற்றவர் விளையனூர் இராமச்சந்திரன். பி.பி.சி. வானொலி நிறுவனம் ஆண்டுதோறும் மெய்யியல், அறிவியல், சமூகவியல் அறிஞர்களைக் கௌரவித்து, அவர்களது உரைகளை ஒலிபரப்பும். இந்தப் பேருரைகள் ‘டாக்டர் ரீய்த் லெக்சர்ஸ்’ என அவற்றைத் தொடங்கி வைத்தவரின் பெயரால் அழைக்கப்படுகின்றன. 2003 ஆம் ஆண்டு அவ்வாறு சிறப்பிக்கப்பட்டவர் மருத்தவர் இராமச்சந்திரன்[2]. அவர் மூளை, மனம், கலை எனப் பல்வேறு தளங்களை உள்ளடக்கிய ஐந்து பேருரைகள் ஆற்றினார். அது தொகுக்கப்பட்டு "The Emerging Mind" என்ற பெயரில் 2003 இல் நூலாக வெளிவந்தது, இந்தூல் தமிழில் உருவாகும் உள்ளம் என்ற பெயரில் ஆயிஷா நடராசனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.

சுருக்கம்[தொகு]

தமிழில்

இந்நூலில் மனிதன் தன் காட்சிப்புலன்களால் உலகை எவ்வாறு அறிகிறான் என்பதை ஆசிரியர் விளக்குகிறார். கண்களைத் திறந்தவுடன் மனிதன் காணும் காட்சிகளை அவன் அறியும் விதம், உண்மையில் சாதாரண ஒளிப்படக் கருவியின் செயல்பாடு போன்றது அல்ல. அதைவிட மிகமிக சிக்கலானது. காட்சிப் புலன் தொடர்பாக மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் மூளையில் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பணியைச் செய்கின்றன.

மனிதன் காணும் ஒவ்வொரு பொருளும், நபரும், அவனுக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தும். இதனாலேயே காதலியைக் கண்டால் பரவசம், எதிரியைப் பார்த்தால் கோபம் என ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் காட்சிப்புலன் தொடர்பான பகுதிகள் உணர்ச்சிகள் தொடர்பான பகுதிகளோடு தொடர்புகொண்டிருப்பதே ஆகும். இந்தத் தொடர்பு இழை சில பாதிப்புகளால் துண்டானால், பார்க்கும் நபர்கள் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தாமல் அந்நியர்கள்போல் தோன்றுவார்கள் என்கிறார்.

நூலின் இறுதிப்பகுதியில் மிகச் சிக்கலான விஷயங்களைப் பற்றி அலசுகிறார். மனிதன் செய்யும் செயல்கள் எல்லாம் அவனது முழு கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனவா, அப்படியென்றால் கார் ஓட்டும்போது ஏதோ சிந்தனை செய்து கொண்டே போவது எப்படி என்பன போன்ற விஷயங்களைப் பேசுகிறார். நமது மூளையின் பல செயல்கள் அனிச்சையாக நடக்கின்றன. ‘தான்’ என்னும் சுயஉணர்வு என்றால் என்ன என்ற கேள்வி ஆன்மிக, தத்துவவாதிகள் எழுப்புவது. மூளையின் சில பகுதிகள்தான் இந்த ‘தான்’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. நமது கையை அசைக்கும்போது இந்த ‘தான்’ பகுதிகளும் செயல்படுவதால், நமக்கு நம் கை நமது கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தோன்றுகிறது என குறிப்பிடுகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Emerging Mind". Google Books. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Reith Lectures 2003-The Emerging Mind
  3. டாக்டர். ஜி. ராமானுஜம் (8 ஏப்ரல் 2017). "வாசிப்பை வசப்படுத்துவோம்: உள்ளம் உருவாகும் ரசவாதம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவாகும்_உள்ளம்&oldid=3928061" இலிருந்து மீள்விக்கப்பட்டது