உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயலலிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய லலிதா
பிறப்புஅனபர்த்தி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1962-1997

 விஜயலலிதா (Vijayalalitha) என்பவர் 1960கள், 1970களில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். ராணி மேரா நாம் (1972), பாஸிகர் (1972) சாக்ஷி (1967) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இவர் அரசியல்வாதியாக மாறிய தெலுங்கு உச்ச நட்சத்திரமான விஜயசாந்தியின் சித்தி ஆவார்.[1]

துவக்ககால வாழ்க்கையும், பின்னணியும்

[தொகு]

விஜயலலிதா நடிகை விஜயசாந்தியின் உறவினராவார். விஜயலலிதாவின் அக்காளின் மகள்தான் விஜயசாந்தி. விஜயலலிதா 860 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை]

தொழில்

[தொகு]

விஜயலலிதா 1960கள், 1970களில் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் "பெண் ஜேம்ஸ் பாண்ட்" என்று சிறப்பாக அறியப்பட்டார். மேலும் பல தமிழ் திரைப்படங்களில் "தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்" நடிகர் ஜெய்சங்கருடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். வல்லவன் ஒருவன் படத்தில் இவரது நடனம் இடம்பெற்ற "பளிங்கினால் ஒரு மாளிகை" என்ற பாடல் இதுவரை பசுமையாக நினைக்கப்படுகிறது. ஜெய்சங்கருடன் இவர் இணைந்து நடித்த நீலகிரி எக்ஸ்பிரஸ், கண்ணன் வருவான், காலம் வெல்லும், மாப்பிள்ளை அழைப்பு, நூற்றுக்கு நூறு, நில் கவனி காதலி, அக்கா தங்கை, பட்டணத்தில் பூதம், வல்லவன் ஒருவன், நேர் வாழி, டெல்லி முதல் மெட்ராஸ் வரை போன்றவை மறக்கமுடியாத தமிழ் திரைப்படங்களில் சில ஆகும். இவர் பல பெண் மையம் சார்ந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் திரைப்படப் படப்பிடிப்புக்கு உரிய நேரத்திற்கு வருவதற்காக பெயர் பெற்றவர். தெலுங்கு திரைப்படங்களில் என். டி. ராமா ராவ் மற்றும் அக்கெனேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருடன் தொடர்ந்து நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரைப்படமான ஒக்க நரி ஒந்த துப்பாக்குலு (1973) என்ற படத்தை தயாரித்து, கதாநாயகியாகவும் நடித்தார். இவர் 1977 முதல் 1981 வரை தனது தொழில் வாழ்வில் உச்சத்தில் இருந்து அதிக திரைப்படங்களில் நடித்தார். ஒரு குறுகிய காலத்திற்குள், அவர் ஒரு அதிரடி கதாநாயகியாக பரபரப்பை ஏற்படுத்தினார். சில தமிழ் திரைப்படங்களில் இவர் திமிர்பிடித்த, எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார். இவர் நாகேசுடன் தேன் கின்னம், ஹலோ பார்ட்னர் மற்றும் எம். ஜி. ராமச்சந்திரனுடன் காதல் வாகனம் ஆகிய படங்களில் நடித்தார். இவர் சாந்தி நிலையம். படத்தில் "ஷீலா" என்ற திமிர்பிடித்த பெண்ணை சித்தரித்தார். 3 தசாப்தங்களாக, விஜயலலிதா 4 தென்னிந்திய மற்றும் இந்தி மொழிகளிலும் பிரதானமாக 860 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

[தொகு]

தமிழ்

[தொகு]

இந்த பட்டியல் முழுமையடையாது; இதை விரிவாக்கி அதன் மூலம் நீங்கள் உதவலாம்.

  1. வள்ளி வரப் போறா (1995)
  2. அதிசயப் பிறவி (1989)
  3. செந்தூரப்பூவே (1988)
  4. விஷக்கன்னி (1985)
  5. துணிச்சல்காரி (1982)
  6. சி.ஐ.டி. விஜயா (1980)
  7. நல்லதொரு குடும்பம் (1979)
  8. சுப்ரபாதம் (1979)
  9. உங்களில் ஒருத்தி (1976)
  10. ஜெய் பாலாஜி (1976)
  11. ஓட்டல் சொர்க்கம் (1975)
  12. கைநிறைய காசு (1974)
  13. என்ன முதலாளி சௌக்கியமா (1972)
  14. டில்லி டு மெட்ராஸ் (1972)
  15. மாப்பிள்ளை அழைப்பு (1972)
  16. கண்ணன் வருவான் (1972)
  17. சவாலுக்கு சவால் (1972)
  18. ஹலோ பார்ட்னர் (1972)
  19. கன் பைட் காஞ்சனா (1972)
  20. நான்கு சுவர்கள் (1971)
  21. நூற்றுக்கு நூறு (1971)
  22. தேன் கிண்ணம் (1971)
  23. மீண்டும் வாழ்வேன் (1971)
  24. எதிரொலி (1970)
  25. கல்யாண ஊர்வலம் (1970)
  26. காலம் வெல்லும் (1970)
  27. நம்மவீட்டு தெய்வம் (1970)
  28. பத்தாம் பசலி (1970)
  29. ரிவால்வர் ரீடா (1970)
  30. சொர்க்கம் (1970)
  31. திருடன் (1969)
  32. நில் கவனி காதலி (1969)
  33. சாந்தி நிலையம் (1969)
  34. அஞ்சல் பெட்டி 520 (1969)
  35. அக்கா தங்கை (1969)
  36. நேர்வழி (1968)
  37. காதல் வாகனம் (1968)
  38. நீலகிரி எக்ஸ்பிரஸ் (திரைப்படம்) (1968)
  39. எதிரிகள் ஜாக்கிரதை (1967)
  40. பக்த பிரகலாதா (1967)
  41. பட்டணத்தில் பூதம் (1967)
  42. வல்லவன் ஒருவன் (1966)
  43. காதல் படுத்தும் பாடு (1966)
  44. காட்டு மைனா (1963)

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயலலிதா&oldid=4114436" இலிருந்து மீள்விக்கப்பட்டது