விசாகா வழிகாட்டுதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசாகா வழக்கில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள், சீண்டல்கள் தடுப்பது குறித்து, 1997 இல் இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்

விசாகா வழிகாட்டுதல்கள் ( Vishakha Guidelines) என்பது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விசாகா எனும் பெண்ணின் வழக்கில்[1], இந்திய உச்சநீதிமன்றம், 1997 இல் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியியல் துன்புறத்தல்கள், வன்முறைகள், சீண்டல்களை தடுத்திட வேண்டி, பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களில் விசாகா குழு எனும் பெயரில் குழுக்கள் அமைத்திட வேண்டும் என ஆணையிட்டது.[2] இந்திய உச்சநீதிமன்றத்தின் விசாகா வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இந்திய அரசு 2013 இல் பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டத்தைக் கொண்டு வந்தது.

பாலியல் தொல்லைகள் என்றால் என்ன[தொகு]

பாலியல் துன்புறுத்தல் என்பது வரவேற்கத் தகாத பாலியல் சார்ந்த நடத்தைகளும் உள்ளடக்கியது (நேரடியாகவோ அல்லது உட்குறிப்பாகவோ) அவைகள்:

  • உடலைத் தொடுதல், தொட முயற்சித்தல்
  • பாலியல் இச்சையை நிறைவேற்றக் கோருவது
  • பாலியலைத் தூண்டும் விதமாக பேசுவது
  • ஆபாசப் படங்களை காண்பிப்பது
  • பெண்களிடம் வரவேற்கத் தகாத பாலியல் ரீதியான வாய்மொழிச் சொற்கள் பேசுவது, உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது

எனவே, பாலியல் துன்புறுத்தல் என்பது உடல் ரீதியான தொடர்பு இல்லை என அறிந்து கொள்ள வேண்டும்.

பரிந்துரைகள்[தொகு]

தேசிய மகளிர் ஆணையம், விசாகா வழிகாட்டுதல்களின் படி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுத்திடக் குழு அமைக்க வேண்டும் என இந்திய அரசிடம் வலியுறுத்தியது.[3]

பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 9 டிசம்பர் 2013 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.[4]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Vishaka Guidelines against Sexual Harassment at Workplace (text)" (PDF). Archived from the original (PDF) on 2013-11-29. பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
  • விசாகா கமிட்டி விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாகா_வழிகாட்டுதல்கள்&oldid=3591902" இலிருந்து மீள்விக்கப்பட்டது