ரகா நோவா
ரகா நோவா Rahah Mohamed Noah | |
---|---|
2-ஆவது மலேசிய பிரதமரின் மனைவி | |
' 22 செப்டம்பர் 1970 – 14 சனவரி 1976 | |
ஆட்சியாளர்கள் | கெடா அப்துல் ஆலிம் யகாயா பெத்ரா |
பிரதமர் | அப்துல் ரசாக் உசேன் |
முன்னையவர் | சரிபா ரோட்சியா பாரக்பா |
பின்னவர் | சுகைலா நோவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மூவார், ஜொகூர், மலாயா கூட்டமைப்பு, பிரித்தானிய மலாயா (தற்போது மலேசியா) | 11 சூன் 1933
இறப்பு | 18 திசம்பர் 2020 கோலாலம்பூர், மலேசியா | (அகவை 87)
இளைப்பாறுமிடம் | மாவீரர் கல்லறை, தேசியப் பள்ளிவாசல், கோலாலம்பூர் |
துணைவர் | அப்துல் ரசாக் உசேன் 4 செப்டம்பர் 1952 |
பிள்ளைகள் | 5 (நஜீப் ரசாக்) |
பெற்றோர் |
|
துன் ரகா நோவா (ஆங்கிலம்: Tun Rahah binti Mohamed Noah; சாவி: راحة محمد نوح ) பிறப்பு: 11 சூன் 1933 – இறப்பு: 18 திசம்பர் 2020) என்பவர் மலேசியாவின் 2-ஆவது பிரதமர் துன் ரசாக் (Tun Abdul Razak Hussein) (1922–1976) அவர்களின் மனைவியும்; மலேசியாவின் 6-ஆவது பிரதமர் நஜீப் ரசாக்கின் தாயாரும் ஆவார்.
இவர் மலேசிய மக்களவையின் முதல் தலைவராகவும், மலேசிய மேலவையின் மூன்றாவது தலைவராகவும் பதவி வகித்த முகமது நோவா ஒமார் என்பவரின் (1898-1991) மகள் ஆவார்.
இவர் 22 செப்டம்பர் 1970 தொடங்கி, 14 சனவரி 1976 வரையிலும்; ஏறக்குறைய 7 ஆண்டுகள் மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்ந்துள்ளார்.
தொடக்க கால வாழ்க்கை
[தொகு]ரகா நோவா 1933-ஆம் ஆண்டு சூன் 11-ஆம் தேதி ஜொகூர், மூவாரில் பிறந்தார். பத்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இவர் மிக இளையவர். ஜொகூர் பாருவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (UMNO) தீவிர உறுப்பினராக இருந்த அப்துல் ரசாக் உசேன் அவர்களுக்கு ரகா நோவா அறிமுகமானார்.
இலண்டனில் படிக்கும் போது துன் அப்துல் ரசாக்கின் நண்பரான தைப் ஆண்டகா (Taib Andaka) என்பவரால் அம்னோ அமைப்பு நிறுவப்பட்டது.
அப்துல் ரசாக் உசேன் அவர்களும்; ரகா நோவா அவர்களும்; 4 செப்டம்பர் 1952-இல் திருமணம் செய்து கொண்டனர்.[1]
பொது
[தொகு]அப்துல் ரசாக் உசேன் 1970-இல் மலேசியாவின் இரண்டாவது பிரதமரானார். பிரதமரின் மனைவியாக, ரகா நோவா மலேசியாவின் பெண் சாரணர் சங்கத்தின் தலைவராகவும் (Girl Guides Association of Malaysia), முசுலீம் பெண்கள் செயல் அமைப்பின் (Muslim Women's Action Organisation) (Pertiwi) புரவலராகவும் பணியாற்றினார்.[1]
1976-இல், துன் ரசாக் பதவியில் இருந்தபோது காலமானார். அப்போது ரகா நோவாவின் வயது 43. மிக இளம் வயதிலேயே விதவையானார்.
துன் ரகா நோவா தற்போது, துன் ரசாக்கின் நினைவாக நிறுவப்பட்ட பல்கலைகழகமான துன் அப்துல் ரசாக் பல்கலைக்கழகத்தின் (Universiti Tun Abdul Razak) வேந்தராக பொறுப்பில் உள்ளார்.[1]
இறப்பு
[தொகு]துன் ரகா, 18 திசம்பர் 2020 அன்று கோலாலம்பூரில் உள்ள பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் தனது 87-ஆவது வயதில் காலமானார்.[2][3][4][5]
கோலாலம்பூரின் தேசியப் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள மாவீரர்களின் கல்லறையில் அவரின் சகோதரி துன் சுகைலா முகமது நோவாவின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். துன் சுகைலா, மலேசியாவின் மூன்றாவது பிரதமர் உசேன் ஓன் அவர்களின் மனைவி ஆவார்.[6][7][8]
விருதுகள்
[தொகு]மலேசிய விருதுகள்
[தொகு]- மலேசியா :
- - உயரிய நம்பிக்கை மகுட விருது (SSM) – Tun (1976)[9]
- சரவாக் :
- - மலேசிய விருதுகள்#மதிப்புறு விருதுகள்; பதக்கங்கள் (PNBS) – Dato Sri (2002)
- பகாங் :
- - மலேசிய விருதுகள்#மதிப்புறு விருதுகள்; பதக்கங்கள் (SIMP) – formerly Dato', now Dato' Indera (1973)[10]
- சபா :
- - மலேசிய விருதுகள்#மதிப்புறு விருதுகள்; பதக்கங்கள் (SPDK) – Datuk Seri Panglima (1974)[11]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tun Rahah Noah". Ensiklopedia Bahasa Malaysia. JBDirectory. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
- ↑ "Najib's mum Tun Rahah passes away at age 87". The Star. 18 December 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "Tun Rahah dies". New Straits Times. 18 December 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "Tun Rahah meninggal dunia pada usia 87 tahun". Bernama. 18 December 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "Tun Rahah meninggal dunia". Utusan Malaysia. 18 December 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "Tun Rahah laid to rest at Heroes' Mausoleum". Bernama. 19 December 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "Tun Rahah laid to rest at National Heroes Mausoleum". New Straits Times. 19 December 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "Jenazah Tun Rahah selamat dikebumikan". Harian Metro. 19 December 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1976" (PDF).
- ↑ Zainuddin Maidin (1997). Tun Razak : jejak bertapak seorang patriot. Kuala Lumpur: Lembaga Pemegang Amanah, Yayasan Tun Razak. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-61-0751-4. இணையக் கணினி நூலக மைய எண் 38048384.
- ↑ "Hussein and Rahah get top Sabah awards". New Straits Times: pp. 1. 14 September 1974. https://books.google.com/books?id=dIYjAAAAIBAJ&dq=Toh+Puan+Rahah+SPDK&pg=PA13&article_id=2033,1560945.
வெளி இணைப்புகள்
[தொகு]- Asiaweek.com, 24 March 2000.
- Putera Negara; 1987, Firma Publishing, Aziz Zarina Ahmad.