உள்ளடக்கத்துக்குச் செல்

எண்டோன் மாமூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்டோன் மாமூட்
Endon Mahmood Ambak
எண்டோன் மாமூட் (1999)
5-ஆவது மலேசிய பிரதமரின் மனைவி
'
31 அக்டோபர் 2003  20 அக்டோபர் 2005
ஆட்சியாளர்பெர்லிஸ் சிராஜுதீன்
பிரதமர் அப்துல்லா அகமது படாவி
முன்னையவர் சித்தி அசுமா முகமட் அலி
பின்னவர்ஜீன் அப்துல்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-12-24)24 திசம்பர் 1940
கிள்ளான், சிலாங்கூர், மலாயா கூட்டமைப்பு, பிரித்தானிய மலாயா (தற்போது மலேசியா)
இறப்பு20 அக்டோபர் 2005(2005-10-20) (அகவை 64)
புத்ராஜெயா, மலேசியா
இளைப்பாறுமிடம்தாமான் செலாத்தான்,முஸ்லீம் கல்லறை, வளாகம் 20, புத்ராஜெயா, மலேசியா
துணைவர்துன் அப்துல்லா அகமது படாவி
பிள்ளைகள்2

துன் எண்டோன் மாமூட் (ஆங்கிலம்: Tun Endon binti Mahmood Ambak; சாவி: هند محمود أعماق‎) பிறப்பு: 24 திசம்பர் 1940 – இறப்பு: 20 அக்டோபர் 2005) என்பவர் மலேசியாவின் 5-ஆவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி அவர்களின் முதல் மனைவி ஆவார்.[1]

எண்டோன் மாமூட்; பத்திக் மற்றும் சொங்கேட் போன்ற பாரம்பரிய துணிக் கலையில் அவரின் பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர் ஆவார்.[2]

வாழ்க்கை

[தொகு]

எண்டோன் மாமூட் என்பவர் டத்தோ மகமூத் அம்பாக் எனும் மலாய்க்காரருக்கும்; டத்தின் மரியம் அப்துல்லா எனும் ஜப்பானியப் பெண்ணுக்கும் பிறந்தவர் ஆவார். எண்டோனுக்கு உடன்பிறப்புகள் 10 பேர். எண்டோன் மாமூட்1940-ஆம் ஆண்டு திசம்பர் 24-ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள கிள்ளானில் பிறந்தார்.

எண்டோனின் தந்தை கிள்ளான் சுரங்கத் துறையில் சுரங்க உதவியாளராகப் பணிபுரிந்தார். பின்னர் கம்பார் மாவட்டத்தில் ஏறக்குறைய 60 சுரங்கங்களை மேற்பார்வையிடுவதற்காக பேராக் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.

எண்டோன் தன் குழந்தைப் பருவ நாட்களின் பெரும்பகுதியை கம்பாரில் கழித்தார்; மற்றும் கம்பார் ஆங்கிலோ-சீனப் பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். அந்தப் பள்ளி தற்போது மெதடிஸ்ட் தேசிய தொடக்கப் பள்ளி என அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் கோலாலம்பூரில் உள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.

குடும்பம்

[தொகு]
கோலாலம்பூர் இஸ்லாமிய பாரம்பரிய அருங்காட்சியகத்தில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி நெய்லா சோகன் & எண்டோன் மாமூட் (1999)

1960-களில் மலேசிய பொதுச் சேவைத் துறையில் பணிபுரியும் போது எண்டோன் மாமூட்டை, அப்துல்லா அகமது படாவி சந்தித்தார். இவர்கள் 1965-இல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் 1976-இல் மலேசிய பொதுச் சேவைத் துறையில் இருந்து எண்டோன் மாமூட் ஓய்வு பெற்றார்.

அப்துல்லா அகமது படாவிக்கும் எண்டோனுக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் டத்தோ கமாலுடின்; ஒரு தொழில் அதிபர். மகள் நோரி அப்துல்லா; மலேசியாவின் பிரபல அரசியல்வாதி கைரி ஜமாலுடீனைத் திருமணம் செய்துள்ளார். அப்துல்லா அகமது படாவிக்கும் எண்டோனுக்கும் நான்கு பேரக் குழந்தைகள் உள்ளனர்.

இறப்பு

[தொகு]

எண்டோன் மாமூட் 18 ஏப்ரல் 2002 அன்று தீவிர மார்பக அழற்சியின் காரணமாக கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் செயின்ட் ஜான்ஸ் மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை பெற்றார். அதைத் தொடர்ந்து 33 கதிர்வீச்சு சிகிச்சைகள்; மற்றும் தொடர்ச்சியான உடலியல் மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டன. 2003-இல் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

2 அக்டோபர் 2005-ஆம் தேதி, புத்ராஜெயா மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்றார். மார்பக புற்றுநோயுடன் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர், 20 அக்டோபர் 2005 அன்று தம் 64-ஆவது வயதில் எண்டோன் மாமூட் காலமானார்.[3][4]

விருதுகள்

[தொகு]

மலேசிய விருதுகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tun Endon Mahmood". Perdana Leadership Foundation (in ஆங்கிலம்).
  2. "It was the late YABhg Datin Paduka Seri Endon Mahmood, wife of the Prime Minister, YAB Dato' Seri Ahdullah Haji Abmad Badawi, that gave batik back its dignity, raising its national status, expanding its creative potential while forging an international presence in fashion wear". www.worldbatikcouncil.com. Retrieved 22 December 2024.
  3. Jegathesan, M. (2005-10-20). "Nation mourns death of PM's wife". Malaysiakini (in ஆங்கிலம்).
  4. "Obituary:Endon Mahmood, wife of Malay leader". The New York Times (in ஆங்கிலம்). 2005-10-20.
  5. "Yang Di-Pertuan Besar of Negri Sembilan's 83rd Birthday Honours list". The Star (Malaysia). 25 July 2005. Archived from the original on 14 April 2021. Retrieved 12 September 2024.
  6. "SPMS 2002". awards.selangor.gov.my. Retrieved 5 May 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்டோன்_மாமூட்&oldid=4485318" இலிருந்து மீள்விக்கப்பட்டது