பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தொகுப்பு 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்றி நண்பர் செல்வா....... விக்கியின் தரத்துக்கு எழுத முயற்சிக்கிறேன்.சில நாட்களாகலாம்,,தொடர்ந்து எனது முகனூலில் பேசவும் அன்புக்கு நன்றிகள் பல...டாக்டர் பாலசுப்ரமணியன்

ஒலிம்பக் கட்டுரைகள்[தொகு]

வணக்கம் சிவகுரு. நீங்களும் கூறும்பனும் ஒலிம்பிக் தொடர்பான செய்திகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து வருகிறீர்கள். இவற்றின் சுருக்கங்களை 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கட்டுரையில் இட்டு மேம்படுத்த முடியுமா? இது தற்போது இவ்வார முதற்பக்கக் கட்டுரையாக உள்ளது. நன்றி--இரவி (பேச்சு) 16:30, 15 ஆகத்து 2012 (UTC)

இரவி, வணக்கம்! 2012 ஒலிம்பிக் குறித்த இன்னபிற கட்டுரைகளான 2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம், 2012 கோடைக்கால ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு, 2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள், 2012 கோடைக்கால ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுக்கள் போன்றவற்றிற்கு 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கட்டுரையிலிருந்து இணைப்பு உள்ளது. இதன் காரணமாகவே மேற்குறிப்பிட்ட 4 கட்டுரைகளை முடிந்த அளவிற்கு விரிவுபடுத்தி வருகிறேன். எனினும் முக்கிய கட்டுரையை மேலும் மேம்படுத்த குறும்பனுடன் சேர்ந்து முயல்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:55, 15 ஆகத்து 2012 (UTC)

நன்றி[தொகு]

இங்கு கட்டுரை எழுதுவதைப் பற்றி, புதுப் பயனர் ஒருவருக்கு நீங்கள் அளித்த விளக்கம் கண்டேன். அகமகிழ்ந்தேன். நன்றி.--பாஹிம் (பேச்சு) 06:00, 23 செப்டெம்பர் 2012 (UTC)

பரணில் ஏற்றல்[தொகு]

சிவகுரு அவர்களுக்கு நன்றி. பரணில் ஏற்றுதல் தொடர்பான பதமொன்று சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட உரையாடற்பகுதி பரணில் ஏற்றப்படுதல் பொருத்தப்பாடற்றதும், வேண்டுமென்றே செய்யப்பட்டதும் என்று கொள்ளத் தோன்றுகின்றது!Sitralega (பேச்சு)

தவறான எண்ணத்தை திருத்த நினைத்து நான் எழுதிய உரை, அந்தத் தவறினை மேலும் மெருகேற்றப் பயன்படுத்தப்பட்டுவிட்டது. இதற்காக வருந்துகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:14, 28 நவம்பர் 2012 (UTC)
மிக்க நன்றிகள். இங்கு தேவையாகவிருப்பது விக்கிப்பீடியாவின் மேம்பாடே தவிர 'கனக்ஸ்' அல்லது 'சித்திரலேகா' இனது தற்புகழ்சிகள் அல்ல!Sitralega (பேச்சு)

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:37, 26 திசம்பர் 2012 (UTC)

தெரியப்படுத்தியமைக்கு நன்றி, நட்கீரன். பணி அழுத்தத்தாலும், குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் 'ஆய்வுக்கட்டுரை' எழுதும் அளவிற்கு நேரமும், திறனும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை; இறைவனின் அருள் இருந்தால்... அடுத்த ஆண்டு கண்டிப்பாக செய்கிறேன்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:43, 28 திசம்பர் 2012 (UTC)
பதிலுக்கு நன்றி செல்வசிவகுருநாதன். நன்று. --Natkeeran (பேச்சு) 01:43, 29 திசம்பர் 2012 (UTC)

நன்றி ,2013 புத்தாண்டு வாழ்த்துக்கள்[தொகு]

பதக்கம் வழங்கியமைக்கு நன்றி, 2013 புத்தாண்டு வாழ்த்துக்கள் --ஸ்ரீதர் (பேச்சு) 00:57, 1 சனவரி 2013 (UTC)

நன்றி[தொகு]

Nandri (நன்றி).png நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:15, 14 சனவரி 2013 (UTC)


PearY4.jpg

நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:30, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:57, 15 சனவரி 2013 (UTC)

முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்[தொகு]

வணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:56, 31 சனவரி 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Selvasivagurunathan m/தொகுப்பு 2!

100 sculpture.jpg

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:10, 2 பெப்ரவரி 2013 (UTC)


சென்னை விக்கியர் சந்திப்பு[தொகு]

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:09, 5 மார்ச் 2013 (UTC)

உங்களுக்குத் தெரியுமா?[தொகு]


கருநாடக இசை[தொகு]

வலைவாசலின் முதற்பக்கம் எப்போது அமைக்கவிருக்கிறீர்கள்?--Kanags \உரையாடுக 11:07, 23 ஏப்ரல் 2013 (UTC)

முக்கிய துணைப் பக்கங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. அனைத்தையும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்; முதற்பக்கத்தின் வடிவமைப்பை இறுதி செய்யவேண்டும். இவ்வார முடிவுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:39, 23 ஏப்ரல் 2013 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?[தொகு]

வணக்கம், சிவகுரு. தொடர்ந்தும் முனைப்புடனு் செயல்பட்டு வரும் நீங்கள், நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் பயன் மிக்கதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் விருப்பத்தை அறிந்தால், நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:03, 2 மே 2013 (UTC)

விருப்பம்; பரிந்துரையுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:02, 4 மே 2013 (UTC)
பரிந்துரையை ஏற்பதற்கு நன்றி. உங்கள் முறையான ஒப்புதலை விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் தெரிவித்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 16:09, 6 மே 2013 (UTC)

விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Selvasivagurunathan m/தொகுப்பு 2!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:17, 5 மே 2013 (UTC)

வலைவாசல்[தொகு]

கருத்துகளுக்கு நன்றி சிவகுரு. செங்கை ஐயா வலைவாசல் உருவாக்க உதவி செய்தால் முயலலாம் எனச் சொல்லியிருந்தார். உங்களைப் போல ஆளாளுக்கு ஒரு வலைவாசல் உருவாக்கியுள்ளீர்களே சரி நாமும் முயற்சி செய்வோமே எனச் செய்தது தான் (கத்துகுட்டி வேலை). எனக்கு இன்னுமே இவ்வாறான வேலைகள் புரியவில்லை:).... கண்டிப்பாக அனைவரின் கூட்டு முயற்சி இருந்தால் இலக்கிய வலைவாசல் பொலிவு பெறும். மீண்டும் நன்றிகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:03, 5 மே 2013 (UTC)

//பொதுவான இலக்கிய வலைவாசல் என்றால்... தமிழிலக்கியம், இந்திய இலக்கியம் மற்றும் உலக இலக்கியம் என மனதினுள் மூன்றாகப் பிரித்து இப்பக்கத்தின் வடிவமைப்பினைத் தீர்மானிக்கலாம்.//

பொதுவாக இலக்கிய வலைவாசல் தான் வடிவமைக்க நினைத்தேன். தாங்கள் கூறியபடி அமைப்பினும் சரி அல்லது தமிழிலக்கியத்திற்கென தனியாக இருப்பினும் எனக்கொன்றும் மாற்று கருத்து இல்லை. செம்மைப்படுத்தி உதவுங்கள். அவ்வப்போது எனகான பணியைக் கூறினால் நானும் இணைந்து கொள்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:31, 6 மே 2013 (UTC)

எனில் தமிழிலக்கிய வலைவாசலே அமைக்கலாம். தேவையானவற்றை செய்யுங்கள். உதவக் காத்திருக்கிறேன். வரும் நாட்களில் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் கருத்தைச் செலுத்துகிறேன்.
//இலக்கிய வலைவாசலுக்கு நீங்களே சொந்தக்காரர்!// இதெல்லாம் வேண்டாங்க! விக்கிப்பீடியாவே ஒரு கூட்டு முயற்சிதான்.நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:18, 7 மே 2013 (UTC)
வணக்கம் சிவகுரு, நான் இரண்டு நாட்கள் கோவை செல்வதால் திரும்ப வந்து எனது பணிகளைத் தொடர்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:56, 9 மே 2013 (UTC)
வணக்கம் சிவகுரு. வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள் இப்பக்கத்தில் எனது பரிந்துரைகளை இட்டுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:44, 15 மே 2013 (UTC)

சிறப்பு கட்டுரை பரிந்துரைக்க வேண்டுகோள்[தொகு]

சிவகுரு நண்பரே, தங்களது ஆலோசனைப் படி தஞ்சை கோவிலையும், பகவத் கீதையையும் இணைத்துள்ளேன். மேலும் தீபாவளி கட்டுரையை மேம்படுத்தி அதையும் இட்டுள்ளேன். வேறு கட்டுரைகள் ஏதேனும் சிறப்பு கட்டுரையாக இட தகுதி பெற்றவை என்றால் பரிந்துரை செய்யுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:15, 8 மே 2013 (UTC)

செல்வசிவகுருநாதன் யார்?[தொகு]

எந்த ஒரு விக்கிப்பயனருக்கு விக்கிப்பீடியாவின் தள அறிவிப்பில் நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பு நடக்கிறது என்ற அறிவிப்பு இடாமல் 16க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுகிறதோ அவர் தான் செல்வசிவகுருநாதன்.

நீங்கள் நிர்வாக அணுக்கம் பெறப்போகிறமைக்கு முன் கூட்டியே பாராட்டுகள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:32, 9 மே 2013 (UTC)

👍 விருப்பம், அசத்தல் தென்காசி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:54, 14 மே 2013 (UTC)
Strawberry Ice Cream with Strawberries 01.jpg
கோடை நேரத்தில்... அருமையான குளுமை, சுப்பிரமணியன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:38, 14 மே 2013 (UTC)

நிருவாகி[தொகு]

நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள் சிவகுரு.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:22, 13 மே 2013 (UTC)

பணி சிறக்க வாழ்த்துகள்--ஸ்ரீதர் (பேச்சு) 00:42, 14 மே 2013 (UTC)

வாழ்த்துகள் செல்வசிவகுருநாதன்! --Anton (பேச்சு) 01:17, 14 மே 2013 (UTC)

வாழ்த்துகள் சிவகுருநாதன்.--Kanags \உரையாடுக 08:03, 14 மே 2013 (UTC)
பணி சிறக்க பல புதுமைகள் (நிருவாகி!) புரிய வாழ்த்து --ஆதவன் (பேச்சு) 15:00, 14 மே 2013 (UTC)
👍 விருப்பம் நான் தான் முதலில் வாழ்த்தணும்ன்னு இருந்தேன். :) உங்களால் நிர்வாகப் பொறுப்பு சிறக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:40, 14 மே 2013 (UTC)

புதிய பொறுப்பில் சிறப்புற பங்கேற்றிட வாழ்த்துகள் செல்வசிவகுருநாதன்--மணியன் (பேச்சு) 17:52, 14 மே 2013 (UTC)

எனது வாழ்த்துக்களும் செல்வசிவகுருநாதன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:28, 20 மே 2013 (UTC)

இலக்கிய வலைவாசல்[தொகு]

வணக்கம், இலக்கிய வலைசாலுக்குத் தகுந்த ஈழத்து இலக்கியம் பற்றிய கட்டுரைகளைத் தேடி வருகிறேன். சிறந்த கட்டுரைகளாக ஒன்றிரண்டு கட்டுரைகளே உள்ளன. அவற்றைத் தருகிறேன். மேலும் தேடிப் பார்க்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 22:42, 18 மே 2013 (UTC)

வணக்கம் சிவகுரு. வலைவாசல்: இலக்கியத்தில் மிகவும் பொறுமையாக திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும். இவ்வளவு முன்னேற்பாடுகள் இதில் இருகிறதென்பது எனக்கு இப்பொழுதே தெரியவருகிறது. இதில் இடம்பெறும் பகுதிகள் தானியக்கமாகக் காட்சிக்கு வருமா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:44, 20 மே 2013 (UTC)


சென்னை விக்கியர் சந்திப்பு[தொகு]

மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:30, 21 மே 2013 (UTC)


வணக்கம், . 26-5-13நடைபெற உள்ள விக்கியர் சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றி. அருண் தாணுமாலயன்

ஐயா, தங்களைப் போன்ற அறிஞர்கள் இத்தகைய சந்திப்புகளில் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கியும், தங்கள் ஐயங்களைத் தீர்த்தும் கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் கலந்துகொள்வோர் என்ற வரிசையில் தங்கள் பெயரையும் சேருங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில்

பேரன்புடையீர்,

வணக்கம்.அண்மையில்,டாட்டா நினைவு மையம், கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம் போன்ற சிறு தொகுப்பிற்கு படங்களை இணைக்க முயன்றேன்.முடியவில்லை.எங்கு தவறு என்று தெரியவில்லை.படிப்படியாக செய்ய வேண்டுவதை விளக்கினால் நலமாக இருக்கும். நன்றி உடையவனாக இருப்பேன்.

அருண்தாணுமாலயன்

பார்வைக்கு[தொகு]

மலேசிய வானொலிப் பேட்டி[தொகு]

சிவகுரு, மலேசிய வானொலிப் பேட்டி குறித்த குழப்பத்துக்கு வருந்துகிறேன். பயனர் செல்வாவே அப்பேட்டியை அளித்துள்ளார். அது குறித்த விளக்கத்தையும் முத்துக்கிருசுணனின் பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளார். நன்றி.--இரவி (பேச்சு) 06:31, 2 சூன் 2013 (UTC)

ok ravi. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:44, 2 சூன் 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Selvasivagurunathan m/தொகுப்பு 2!

250 Raketna Brigada.png

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:16, 2 சூன் 2013 (UTC)

'மைல்கல்' அறிவிப்பினை வெளியிட்டு ஊக்குவிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி, ரவி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:09, 20 சூன் 2013 (UTC)

எழுத்துரு மாற்றம் குறித்து[தொகு]

எழுத்துரு மாற்றம் குறித்து விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) த்தை காணவும். தீர்வுள்ளது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:23, 11 சூன் 2013 (UTC)

உதவி[தொகு]

அன்பு செல்வ!கைவல்ய நவநீதம் அட்டைப் படம் கட்டுரையில் இணைக்கலாமா? முயற்சித்தேன் முடியவில்லை--Yokishivam (பேச்சு) 03:47, 15 சூன் 2013 (UTC)

சரி செய்துள்ளேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:23, 15 சூன் 2013 (UTC)

நன்றி[தொகு]

அன்பு செல்வா! படம் இணைத்தமைக்கு நன்றி தங்களின் வேண்டுகோளில் ஒன்று அசுவமேத யாகம் உடனடியாக விக்கியாக்க தரமுயற்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, இக்கட்டுரையில் உள்ளவற்றை முழுமையாக மாற்ற நேரிடும் செய்யலாமா? ஆடிக் கிருத்திகை தகவல்கள் சேகரிக்கத் தொடங்கியவுடன் செய்துவிடுகிறேன்.--Yokishivam (பேச்சு) 11:10, 15 சூன் 2013 (UTC)

    • மீண்டும் நன்றிகள்! நான் அரசுத் துறை விருதுகளை மாவட்ட நில அளவை அலுவலரிடம் 2010ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் "சிறந்த உழைப்பாளர்" விருதும்,2011 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் குடியரசு தின விழாவில் "சிறந்த உழைப்பாளர்" விருதும், கிடைத்த போது எனக்கு ஏற்பட்ட உவகையும், உள்ள பூரிப்பும் மீண்டும் ஓய்வுக்குப் பிறகு (இருதய அறுவை சிகிச்சையினால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன்) கிடைத்திருப்பதில் மகிழ்கிறேன். நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 16:23, 15 சூன் 2013 (UTC) அசுவமேத யாகம் உடனடியாக விக்கியாக்க தரமுயற்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, இக்கட்டுரையில் உள்ளவற்றை முழுமையாக மாற்ற நேரிடும் செய்யலாமா? தங்களின் ஆலோசனை ?? அன்புடன்--Yokishivam (பேச்சு) 16:23, 15 சூன் 2013 (UTC)